இது என்ன நியாயம்..? இதனால் தான் சூர்யா ஜோதிகா திருமணத்தை தடுத்தேன்..? சிவகுமார் ஆக்ரோஷம்..!

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகள் ஆக ரசிகர்களால் பார்க்கப்பட்டு சிறந்த couple என பெயர் எடுத்திருப்பவர் சூர்யா ஜோதிகா தான்.

இவர்கள் திரைப்படங்களில் நடித்து வந்ததன் மூலம் நட்பாக பழகி அதன் பின்னர் காதலாக மாறி பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

சூர்யாவின் காதல்:

முதன் முதலில் இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் தான் நட்பாக பழகத் துவங்கினார்கள்.

அதில் இருவரும் ஒருவருக்கொருவர் பிடித்துப் போக பின்னர் நட்பு காதலாக மாறியது. காதலிக்கும் போது காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், மாயாவி, பேரழகன் உள்ளிட்ட அடுத்தடுத்த,

வெற்றி படங்களில் நடித்து மெகா ஹிட் கொடுத்தனர். அவர்கள் காதலிக்கும் போது வெளிவந்த காக்க காக்க திரைப்படத்தில் வேற லெவல் கெமிஸ்ட்ரி இருக்கும்.

திருமணத்தில் முடிந்த காதல்:

இதை சூர்யா ஜோதிகா இருவருமே பேட்டிகளில் கூறியிருக்கிறார்கள். அதன்பிறகு திரையில் சேர்ந்து நடித்து வந்த இவர்கள் ஜடந்த 2006 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன்,

மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஜோதிகா சில வருடங்கள் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார்.

அதன் பின்னர் மீண்டும் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து வந்தார். சூர்யாவும் தொடர்ந்து படங்களில் நடித்து நட்சத்திர நடிகராக அதிக சம்பளம் வாங்கும்,

நடிகராக பார்க்கப்பட்ட வருகிறார். இதனிடையே சூர்யா ஜோதிகாவின் காதலுக்கு சூர்யாவின் அப்பா சிவக்குமார் கடுமையாக எதிர்த்து அவர்களை திருமணமே செய்ய விடாமல்,

தடுத்து நிறுத்தியதாக விதவிதமான வதந்தி செய்திகள் வெளியான. இதுகுறித்து கோபமாக பதில் அளித்துள்ளார் சிவக்குமார். அதைப் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

திருமணத்தை தடுத்த சிவகுமார்:

சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சிவகுமார் சூர்யா ஜோதிகா திருமணத்தை நான் தடுத்தேன்.

அவர்களுடைய காதலை நிராகரித்தேன். என்றெல்லாம் பல்வேறு வகையில் பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். நான் ஒன்று கேட்கிறேன்.

இதனால் தான் சூர்யா ஜோதிகா திருமணத்தை தடுத்தேன் என்று யாராவது காரணம் கூற முடியுமா? முடியாது. ஏனென்றால் நான் கிட்டத்தட்ட 70 80 படங்களில் நடித்திருக்கிறேன்.

அதில் பல்வேறு கதாநாயகிகளுடன் காதல் காட்சிகள் நடித்திருக்கிறேன். காதலை கொண்டாடுபவன் ஆக நடித்திருக்கிறேன்.

சிவகுமார் ஆக்ரோஷம்:

இப்படி எல்லாம் நடித்துவிட்டு என்னுடைய மகன் ஒரு பெண்ணை காதலிக்கிறான் என்று வரும்போது அதை நான் எதிர்த்தால் இது என்ன நியாயம்?

சூர்யாவும் ஜோதிகாவும் காதலித்தார்கள். அவர்களுடைய திரைப்படங்கள் அவர்களுக்கு இருந்த சில பொறுப்புகள் இதையெல்லாம் நிறைவேற்றும் வரை நான்கு ஆண்டுகள் காத்திருந்தார்கள்.

இந்த இடைப்பட்ட இடைவெளியில் ஊடகங்கள் பல்வேறு கதைகளை எழுதி விட்டன. இதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?

இதற்கு பதில் கொடுக்க போனால்.. அதிலிருந்து நூறு கேள்வி கேர்பார்கள்.. அதனால் நான் அமைதியாக இருந்து விட்டேன் என ஆக்ரோஷமாக பேசியிருக்கிறார் நடிகர் சிவக்குமார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version