என்ன லாரன்ஸ் இப்படி சொல்லிட்டாரு..? திடீர் மாற்றத்தால் ரசிகர்கள் ஏமாற்றம்.. குவியும் வேண்டுகோள்

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகரும், இயக்குனரும், நடன அமைப்பாளரும், இசையமைப்பாளருமான ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி படங்களுக்கு நடனமாடி மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார்.

டான்ஸ் மாஸ்டராக ரசிகர்கள் எல்லோரது கவனத்தையும் ஈர்த்த ராகவா லாரன்ஸ் தொடர்ச்சியாக திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.

நடிகர் ராகவா லாரன்ஸ்:

1993 ஆம் ஆண்டு வெளிவந்த ஜென்டில்மேன் திரைப்படத்தில் பின்னணி நடன கலைஞராக குரூப் டான்ஸ் ஆக பாடல் ஒன்றிற்கு நடம் ஆடி இருப்பார் லாரன்ஸ்.

அதன் பிறகு சின்ன மேடம் என்ற திரைப்படத்தில் பாடல் ஒன்றில் ஆடிருந்தார்.  இப்படி ஆரம்ப காலத்தில் தொடர்ந்து குரூப் டான்ஸ் ஆக தனது பணியை தொடங்கி அதன் பிறகு திரைப்படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்து வந்தார்

பார்த்தேன் ரசித்தேன், உன்னை கொடு என்னை தருவேன், பார்த்தாலே பரவசம் உள்ளிட்ட பல படங்களில் இவர் முதன்மை தோற்றம் மற்றும் சிறப்பு தோற்றங்களில் நடித்து வந்தார்.

மேலும் விஜய்யின் திருமலை உள்ளிட்ட படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டார் ராகவா லாரன்ஸ்.

இதனிடையே அவர் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளிவந்த முனி திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி தமிழ் சினிமாவையே தன் பக்கம் இழுத்தார்.

ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே ராகவா லாரன்ஸ் நடிப்பை பார்த்து மிரண்டு போனது. அது மட்டுமில்லாமல் பேய் கதையை கருவாக கொண்டு எடுக்கப்பட்ட முனி திரைப்படம் தமிழ் சினிமாவில் மாபெரும் வரலாற்று வெற்றியை படைத்தது.

பேய் படங்களுக்கு அமோக வரவேற்பு:

தொடர்ச்சியாக அவர் பேய் கதைகளை இயக்கியும் நடித்தும் வந்தார். அந்த வகையில் காஞ்சனா, முனி பார்ட் 3, உள்ளிட்ட திரைப்படங்களின் மூலமாக மிகப் பெரிய அளவில் பிரபலமானார் ராகவா லாரன்ஸ்.

திரைப்படம் நடனம் உள்ளிட்டவற்றைத் தாண்டியும் ராகவா லாரன்ஸ் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பல்வேறு நல உதவிகளை செய்து வருகிறார்.

இது அவர் பலகாலமாக கடைபிடித்தும் வருகிறார். அண்மையில் கூட மே ஒன்றாம் தேதி அன்று மாற்றம் என்ற பெயரில் புதிய சேவையை தொடங்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

அந்த சேவையில் அவர் உடன் சில நடிகர்கள் இணைந்து இருக்கிறார்கள்.குறிப்பாக அதில் எஸ் ஜே சூர்யா, கே பி ஓய் பாலா, அறந்தாங்கி நிஷா போன்றவர்களும் லாரன்சுடன் பயணிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

அந்த மாற்றம் என்ற சேவை நிகழ்ச்சியின் மூலமாக ராகவா லாரன்ஸ் இதுவரை 10 ஏழை விவசாயிகளுக்கு ட்ராக்ட்டர் வழங்கி இருக்கிறார் .

” மாற்றம் ” சேவையில் இணைந்த பிரபலங்கள்:

அதோடு வழக்கம் போல ஏழை மாணவ மாணவிகளின் படிப்பு செலவுக்கு அவர்களது மருத்துவ செலவுக்கு உதவி இருக்கிறார்.

மேலும், கணவனை இழந்த பெண்களுக்கு பல உதவிகளையும் செய்திருக்கிறார். அவரின் இந்த சமூக நலன் சார்ந்த அக்கறை கொண்ட விஷயங்கள் பலரது பாராட்டுகளை வழக்கம்போல பெற்று வருகிறது.

இப்படி ஆன நேரத்தில் தான் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் நேற்று தன்னுடைய இரண்டு படங்களின் அறிவிப்பை வெளியிடப் போவதாக தெரிவித்திருந்தார்.

இத்துடன் அந்த இரண்டு படத்தையுமே ராகவேந்திரா ப்ரோடுக்ஷன் சார்பில் தான் தயாரிக்கப் போவதாகவும் அறிவித்திருந்தார்.

அறிவிப்பை தொடர்ந்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் அது என்ன படமாக இருக்கும் என அப்டேட்டுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.

லாரன்ஸ் இயக்கத்தில் KPY பாலா:

அதுமட்டுமில்லாமல் அவரது தயாரிப்பில் KPY பாலா ஹீரோவாக நடிப்பார் என சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்ததால் இந்த எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

ஆனால் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் ராகவா லாரன்ஸ் தனது X தளத்தின் அக்கவுண்ட் சில தொழில்நுட்ப பிரச்சனை ஏற்பட்டதால் படத்தின் அறிவிப்பை வெளியிட முடியவில்லை என விளக்கம் கூறினார்.

இன்னும் சில நாட்களில் அறிவிப்பை வெளியிடுவேன் என்று கூறியுள்ளார். இதை கேட்டு ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து விட்டனர்.

இரண்டு படங்களின் அறிவிப்பு வெளியாகும் என மிகுந்த ஆசையோடு காத்திருந்தோம்.ஆனால் இப்படி ஏமாற்றி விட்டீர்களே என ரசிகர்கள் நேரடியாகவே கமெண்ட் செய்து தெரிவித்து வருகிறார்கள்.

ரசிகர்கள் ஏமாற்றம்:

பின்னர் இதற்கான முறையான காரணம் என்னவென்று தற்போது தகவல் கிடைத்துள்ளது. அதாவது ராகவா லாரன்ஸ் தயாரிக்கும் அந்த இரண்டு படங்களின் முன்னோட்ட வீடியோ, எடிட்டிங் பணிகள் தாமதம் ஆகிவிட்டதாம்.

அதனால் தான் அப்டேட் வெளியிடமுடியாமல் போய்விட்டதாம்.பின்னர் விறுவிறுப்பாக அதன் பணிகள் தற்போது நடந்து வருவதாகவும் அடுத்த வாரத்துக்குள் அந்த இரண்டு படங்களின் அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் கூறுகிறது.

இதில் நிச்சயம் KPY பாலா ஹீரோவாக நடிப்பார் என்ற விஷயம் கிட்டத்தட்ட உறுதியாக இருக்கும் நிலையில் அது குறித்த அதிகாரப்பூர்வ தகவலுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version