வீட்டில் விளக்கை பூஜை அறையில் எந்த திசையில் ஏற்றினால் என்ன என்ன நடக்கும் தெரியுமா?

பொதுவாக வீட்டில் பூஜை அறையில் விளக்கை நாம் ஏற்றி வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். ஒளி நிறைந்து இருக்கக்கூடிய இடத்தில் தான் நேர்மறை ஆற்றல்கள் அதிகமாக இருக்கும் என்று கூறுவார்கள்.

 அப்படிப்பட்ட விளக்கை பூஜை அறையில் எந்த இடத்தில் எந்த திசையில் வைத்தால் என்னென்ன நடக்கும் என்பதை பற்றி இனி தெரிந்து கொள்ளலாம்.

 வடக்கு திசையை நோக்கி நீங்கள் விளக்கை ஏற்றும் போது உங்களுக்கு செல்வ சம்பத்து ஏராளமாக கிடைக்கும். மேலும் நீங்கள் பூஜை அறையில் விளக்கை ஏற்றும் போது சூரிய உதயம் ஆவதற்கு முன்பாக பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படும் அழைக்கப்படக்கூடிய சமயத்தில் தீபத்தை ஏற்றி வழிபட்டால் உங்களுக்கு எல்லா விதமான யோகங்களும் எளிதில் வந்து சேரும்.

 மேற்கு திசையில் நீங்கள் தீபத்தை ஏற்றி வழிபட உங்களுக்கு மேன்மையாக எல்லாமே இருக்கும். மேலும் நீங்கள் காலை மாலை இருவேளைகளில் விளக்கினை ஏற்றி வழிபட வழிபட உங்கள் இல்லத்தில் சந்தோஷம் நிலவும் சங்கடங்களைத் தவிர்க்க நீங்கள் இந்த திசையில் விளக்கை ஏற்றி வழிபடுவது மிகவும் நல்லது.

 கிழக்கு திசையில் விளக்கை ஏற்றி வழிபடும் போது உங்களுக்கு நினைத்ததெல்லாம் நடக்கும். மேலும் வீட்டில் அமைதி நிலவும். சண்டை சச்சரவுகள் ஏற்படாது. முடிந்தவரை பிரம்ம முகூர்த்த நேரத்தில் நீங்கள் விளக்கினை ஏற்றலாம். அதை தவிர்த்து விட்டால் நீங்கள் ஆறு மணி முதல் ஏழு மணிக்குள்ளாவது அதிகாலை நேரத்தில் விளக்கை ஏற்றுவது நலம் தரும்.

மேலும் விளக்குக்கு திரியை போடும்போது இரண்டு திரிகளை சேர்த்து முறுக்கி ஒன்றாக போடுவது தான் நலம் தரும். தெற்கு திசையில் மட்டும் நீங்கள் தீபத்தை ஏற்ற கூடாது .ஏனெனில் இது எமனின் திசை என்பதால் முக்தி மற்றும் மோட்ச விளக்கினை போடும்போது மட்டும்தான் எந்த திசையை நோக்கி நீங்கள் போட வேண்டும்.

 குறிப்பாக நீங்கள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது சிறப்பானது. மேலும் உங்களுக்கு சகல ஐஸ்வரியமும் கிட்ட நெய் விளக்கு ஏற்றலாம். வீட்டில் இருக்கும் தீய சக்திகளை விரட்டி அடிக்க முக்கூட்டு எண்ணெய் .அதாவது வேப்பெண்ணெய், நல்லெண்ணெய், இடுப்பை எண்ணெய் இது மூன்றையும் கலந்து ஏற்றினால் இன்னும் கூடுதலாக சிறப்பாக இருக்கும்.

மேற்குரிய வழிமுறைகளை பயன்படுத்தி உங்கள் வீட்டில் திரு வினை திரித்து விளக்கினை மூன்று திசைகளில் போட்டு வழிபட்டால் கட்டாயம் வளர்ச்சி என்பது நிச்சயம் உங்களுக்கு ஏற்படும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …