“சப்த ரிஷிகள் யார்?” – நீங்கள் அறிந்து கொள்ள ஒரு அலசல்..!”

இந்து சமயத்தில் சப்த ரிஷிகள் என்று அழைக்கப்படக்கூடிய ரிஷிகளை பற்றிய விரிவான தகவல்களையும் அவர்களது முக்கியத்துவத்தைப் பற்றிய சிறப்புகளையும் இந்தக் கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

சப்த ரிஷிகள் அத்ரி, பரத்துவாஜர்,ஜமதக்னி, கௌதமர், காசிபர், வசிஷ்டர், விசுவாமித்திரர் இவர்கள் அனைவருமே நான்கு வேதங்களையும், இலக்கியங்களையும் தமது தவ வலிமையால் கற்றறிந்தவர்கள்.

SAPTARISHI

இவர்களில் காசிபரிடம் இருந்துதான் தேவர் மற்றும் அசுர குலம் இரண்டுமே தோன்றியதாக கூறுவார்கள். இவரின் இருந்து வந்த மனுவிடம் இருந்து தோன்றியது தான்  மனித குலமாகும்.

அதுபோலவே அத்திரி மகரிஷி இடம் இருந்து தோன்றியவன் சந்திரன். தத்தாத்ரேயரும் அத்ரி தம்பதிகளிடமிருந்து உருவானவர். அத்தி, அனுசுயா தம்பதியைப் போல தாம்பத்தியம் சிறக்க வாழ வேண்டும் என புதுமண தம்பதிகளுக்கு ரிக் வேதம் கூறுகிறது.

SAPTARISHI

விஸ்வாமித்திர முனிவரோ இந்திரனுடன் மோதி புதிதாக ஒரு உலகத்தை உருவாக்க முயற்சி செய்தவர். இவர் படைப்பில் உருவாகிய இனம் தான் நாயும் பூனையும். இவருக்கு அதிக அளவு கோபம் ஏற்படும்.

கற்புக்கரசிகளில் ஒருவராக போற்றப்படுகின்ற அருந்ததியின் கணவரான வசிஷ்ட பெண்மைக்கு மரியாதை செய்தவர். ஆவணி மாதம் வளர்பிறை ஐந்தாம் நாள் ஏற்படுகின்ற தினத்தில் ரிஷி பஞ்சமி வரும். இந்த ரிஷி பஞ்சமியை அனைவரும் வழிபடுவதின் மூலம் மறு பிறவியை இல்லாத நிலையை அடையலாம் என்று புராணம் கூறியுள்ளது.

SAPTARISHI

தீயவர்களை அழிக்க பெருமாள் எடுத்த அவதாரத்தில் பரசுராமருக்கு தகப்பனாக இருந்தவர்தான் என்ற ஜமதக்னி முனிவர் ஆவார்.

தர்ம சாஸ்திரத்தை இயற்றியவர் கௌதமர் மேலும் தர்மத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் மற்றவர்களுக்கு எடுத்துக் கூறியவர்.

SAPTARISHI

வேதம் பயல தனது மூன்று விதமான ஆயுள்களையும் பயன்படுத்திய பரத்வாஜ முனி மருத்துவத்தில் மிகச் சிறப்பாக விளங்கியவர்.

இத்தகைய சிறப்புமிக்க சப்த ரிஷிகளை நீங்கள் வணங்குவதின் மூலம் உங்கள் வாழ்க்கையில் எண்ணற்ற பலன்களை அடைய முடியும். எனவே நீங்கள் இவர்களை மனதால் நினைத்தாலே போதும் உங்களை நன்மைகள் தேடி வரும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …