” மருத்துவ குணம் உள்ள பூண்டு..!” – அட இவர்களெல்லாம் சாப்பிடக்கூடாதா?

பூண்டு எண்ணற்ற மருத்துவ குணங்கள் உண்டு என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். அப்படிப்பட்ட பூண்டினை தினமும் உணவில் சேர்ப்பதால் மனிதர்களுக்கு எண்ணற்ற நன்மைகள் உண்டாகிறது.

 எனினும் இந்த பூண்டினை சில பிரச்சனைகள் இருப்பவர்கள் நிச்சயமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அப்படி எடுத்துக் கொள்ளும் போது அந்த பிரச்சனை அதிகரிக்க கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதால் இந்த கட்டுரையில் யார் யார் பூண்டினை எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

பூண்டினை உண்ண கூடாதவர்கள்

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று கூறுவார்கள். அதுபோல மருந்து பொருளாக இருந்தாலும் உணவில் கட்டாயம் அதை ஓரளவு மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 அந்த வகையில் பூண்டு பல நன்மைகளை தந்தாலும் சில பேருக்கு இந்தப் பிரச்சனைகள் இருக்கும் பட்சத்தில் பூண்டின் பக்கமே செல்லக் கூடாது. அப்படி பூண்டின் பக்கம் செல்லாமல் இருப்பதால் நன்மை பெரும் நபர்கள் யார் யார் என தெரிந்து கொள்ளலாமா?

👍 அமிலத்தன்மையால் பாதிப்பு அடைந்தவர்கள் பூண்டு சாப்பிடுவதை அறவே நிறுத்தி விட வேண்டும். இல்லை என்றால் அசிடிட்டி பிரச்சனை காரணமாக உங்களுக்கு நெஞ்சில் எரிச்சல் அதிகரிக்கும்.

👍 உடலில் வியர்வை துர்நாற்றம் ஏற்படுபவர்கள் வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் பூண்டு பக்கமே செல்லக் கூடாது. அப்படி பூண்டினை இவர்கள் அதிகமாக எடுத்து உட்கொள்ளும் போது பூண்டில் இருக்கக்கூடிய கந்தக சத்தானது மீண்டும் உங்களது வாய் துர்நாற்றத்தை அதிகப்படுத்தும். எனவே எந்த நிலையிலும் நீங்கள் பூண்டு எடுப்பதை தவிர்த்து விடுங்கள்.

👍 இதய பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு பூண்டு சிறந்த மருந்து தான் .எனினும் தினமும் நீங்கள் இந்த பூண்டை உட்கொள்வதின் மூலம் நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்று பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உள்ளதால் நீங்கள் இதை தவிர்த்து விடுங்கள் நல்லது.

👍 அண்மையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருப்பவர்கள் குறைந்தபட்சம் மூன்று வாரங்களுக்காவது பூண்டினை உணவில் சேர்க்காமல் இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் மூன்று முதல் 6 கிராம் அளவுள்ள பூண்டினை உட்கொள்வதால் மட்டுமே உங்களுக்கு நன்மை கிடைக்கும்.

எனவே மருந்தாக இருந்தாலும் உங்களுக்கு அளவோடு அது இருந்தால் மட்டும்தான் சிறப்பு என்பதை புரிந்து கொண்டு பூண்டினை யார் யார் தவிர்க்க வேண்டுமோ அவரவர் தவிர்த்து விட்டு தேவையான அளவு மட்டும் பூண்டினை உட்கொள்வதின் மூலம் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …