20 வயசு வித்தியாசத்தில் பிரேம்ஜி திருமணம்..! அண்ணனை அழைக்காத கங்கை அமரன்..!

1979 ஆம் ஆண்டு பிறந்த பிரேம் கங்கை அமரன் அட் பிரேம்ஜி அமரன் தமிழ் திரை உலகில் ஒரு சிறந்த நடிகராகவும் இசை அமைப்பாளராகவும், பாடல் ஆசிரியராகவும், பாடகராகவும் பன்முகத் திறமையை கொண்டிருக்கிறார்.

இவர் பெரும்பாலான தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்திருக்கிறார். இவரது நடிப்பை பார்த்து பலரும் ரசித்ததோடு மட்டுமல்லாமல் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் வட்டாரமே தமிழகத்தில் உள்ளது என சொல்லலாம்.

நடிகர் பிரேம்ஜி..

நடிகர் பிரேம்ஜி 2006 ஆம் ஆண்டில் சிலம்பரசன் நடித்த வல்லவன் திரைப்படத்தில் தனது அறிமுக வேடத்தை நடித்ததை அடுத்து வெங்கட் பிரபு அறிமுக இயக்குனராக இயக்கிய சென்னை 600 008 படத்தில் சீனு கேரக்டரில் நடித்து அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றார்.

இதனை அடுத்து சரோஜா திரைப்படத்தில் பாங்கான நடிப்பை வெளிப்படுத்தி பலர் மத்தியிலும் பாராட்டுதல்களை பெற்ற இவர் மங்காத்தா, சேட்டை போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

20 வயதில் வித்தியாசத்தை பிரேம்ஜி திருமணம்..

ஏறக்குறைய 45 வயதை தொட்டிருக்கும் பிரேம்ஜி இது வரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருந்தவர்.

இதனை அடுத்து அண்மையில் இவரது திருமணம் நடந்து முடிந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவியது.

இந்த திருமண வைபவத்தில் கங்கை அமரனின் அண்ணன் இளையராஜா கலந்து கொள்ளவில்லை அது போல அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் கலந்து கொள்ளவில்லை என்ற விஷயம் பல்வேறு விதமான சர்ச்சைகளை கிளப்பியது.

இசை அமைப்பதில் வல்லவரான இளையராஜா பற்றி பல்வேறு வகையான கலவை ரீதியான விமர்சனங்கள் அவர் எப்படிப்பட்டவர் நல்லவரா? கெட்டவரா? என்பது போல பல கால கட்டங்களில் எழுந்துள்ளது.

அண்ணனை அழைக்காத கங்கை அமரன்..

இதனை அடுத்து கங்கை அமரன் அவரது அண்ணன் இளையராஜாவை அழைக்கவில்லையா என்ற கேள்விகள் எழுந்ததோடு மட்டுமல்லாமல் இன்னும் கங்கை அமரன் இளையராஜாவிற்கு இடையே உள்ள சண்டை நீடித்து உள்ளதா? என்ற கேள்வியை ஏற்படுத்தியது.

ஒரு சமயம் இளையராஜாவின் மனைவி இறந்து போன சமயத்தில் கங்கை அமரன் அவர் கையால் வாங்கி சாப்பிட்ட உடம்பு இது கடைசியாக ஒரு முறை அண்ணியின் முகத்தை பார்த்து விட வேண்டும் என்று இளையராஜாவின் வீட்டிற்கு சென்ற போது அவரை உள்ளே வர விடாமல் இளையராஜா தடுத்திருந்தார்.

இதனை அடுத்து பாரதிராஜா எவ்வளவோ சண்டை போட்டும் இளையராஜா மனம் இல்லாமல் தான் கங்கை அமரவை உள்ளே விட்ட சம்பவங்களை தற்போது இணையங்களில் பேசப்படுகிறது.

அது போன்ற மனக்கசப்பால் தான் இவர் திருமணத்திற்கு வரவில்லையா? என்ற கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

எது எப்படியோ போக 45 வயதை கடந்து விட்ட இவர் சென்னையில் உள்ள ஒரு வங்கியில் பணி புரிந்த பெண்ணை காதலித்து தற்போது திருமணம் செய்து கொண்டிருக்கக் கூடிய விஷயம் பலருக்கும் சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனை அடுத்து முருகன் கோயிலில் திருமணம் மிக நேர்த்தியான முறையில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடந்த விஷயங்கள் வீடியோக்களாக வெளி வந்து பலரும் அவரது திருமணத்திற்கான வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தொடர்ந்து தெரிவித்து இருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam