சிறு வயது முதலே தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகை மீனா. பொதுவாக சின்ன பிள்ளையாக இருக்கும் பொழுது நடிப்பு சிறப்பாக வருவது என்பது எல்லா நடிகைகளுக்கும் அமைவது கிடையாது.
ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே மிக அரிதாக அப்படியான ஒரு திறன் இருக்கும். அந்த மாதிரி பிறப்பிலேயே நடிக்கும் திறன் பெற்றவர் மீனா அதனால்தான் அவர் சிறுவயதில் நடித்த திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தமிழில் அவர் சிறுவயதில் நடித்த திரைப்படங்களில் அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படம் மிகவும் முக்கியமான திரைப்படமாகும். அந்த திரைப்படத்தில் மாற்றுத்திறனாளியாக நடித்திருக்கும் மீனா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
சிறு வயதிலேயே பிரபலம்:
அப்போதைய காலகட்டத்திலேயே அந்த திரைப்படம் பெரிதாக பேசப்பட்ட திரைப்படமாக இருந்தது. அதில் நடிக்கும் போது எதிர்காலத்தில் ரஜினிக்கு கதாநாயகியாக நடிப்பார் என்று மீனா நினைத்திருக்க வாய்ப்பில்லை. மீனா நடித்த திரைப்படங்களில் கதாநாயகியாக அவர் நடித்த என் ராசாவின் மனசிலே திரைப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது.
அந்த திரைப்படத்தில் சோலையம்மாள் என்கிற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார் மீனா. கதைப்படி சோலையம்மா திருமணமாகி கர்ப்பமாக இருக்கக்கூடிய ஒரு கதாபாத்திரம் ஆனால் 16 வயதிலேயே அந்த கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்தார் நடிகை மீனா.
அதனை தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வர துவங்கின தமிழில் வெகு காலங்கள் மீனா கதாநாயகியாக நடித்து வந்தார். பொதுவாக ஒரு நடிகை இரண்டு தலைமுறை நடிகர்களுடன் நடிப்பது என்பது பெரிய விஷயமாகும் ஆனால் மீனா அதை அசால்டாக செய்தார்.
இரண்டு தலைமுறைகளாக ட்ரெண்டிங்:
சிறுவயதிலேயே சினிமாவிற்கு வந்து விட்டதால் ரஜினி கமல் போன்ற மூத்த நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்தது மட்டுமில்லாமல் அஜித் மாதிரியான அடுத்த தலைமுறை நடிகர்களுடனும் கதாநாயகியாக நடித்தார். ஆனந்த பூங்காற்றே, சிட்டிசன், வில்லன் ஆகிய திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருப்பார் மீனா.
ஆனால் அதே சம காலகட்டத்தில் அஜித்தை போலவே பிரபலமாக இருந்த நடிகர் விஜய்யுடன் மட்டும் மீனா இதுவரை ஒரு திரைப்படத்தில் கூட நடிக்கவில்லை. எதனால் மீனாவுடன் விஜய்யும் சேர்ந்து நடிக்கவில்லை என்று பார்க்கும் பொழுது அது குறித்து மீனாவே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
அரவிந்த்சாமி மாதிரியான ஒரு சில நடிகர்களுடன் நான் நடிக்கவில்லை அதற்கு காரணம் எனக்கு கால் ஷீட் இல்லாமல் போனதுதான். அதிலும் விஜயுடன் நடிப்பதற்கு நிறைய முறை எனக்கு வாய்ப்பு வந்தது ஆனால் கால் ஷீட் பிரச்சனையால் என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பிரண்ட்ஸ் திரைப்படத்தில் நான்தான் நடிக்க வேண்டி இருந்தது. ஆனால் அப்பொழுது என்னால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை .தெறி திரைப்படத்தில் விஜய் எனது மகளுடன் நடித்துக் கொண்டிருந்த பொழுது என்னிடம் நீங்க வேணும்னு தானே என் கூட நடிக்கல நான் அந்த நேரத்தில் புதுமுகம் என்பதால் நீங்கள் என்கூட நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டீங்க அப்படித்தானே என்று கேட்டார்.
ஆனால் அது உண்மை கிடையாது அந்த நேரத்தில் ஒரு நாளைக்கு மூன்று படங்களில் நான் நடித்துக் கொண்டிருந்தேன் அதனால்தான் என்னால் விஜயுடன் நடிக்க முடியவில்லை என கூறுகிறார் மீனா.