படு மோசமான கவர்ச்சி உடையில் கீர்த்தி பாண்டியன்.. கண்டு கொள்ளாத அஷோக் செல்வன்.. இது தான் காரணமாம்..!

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்தவர் நடிகர் அருண்பாண்டியன். அருண்பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனுக்கும் தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்கிற ஆசை இருந்தது.

அதனை தொடர்ந்து அவர் முதன் முதலாக நடித்த திரைப்படம் தும்பா. தும்பா திரைப்படமானது புலிகளின் அவசியத்தை கூறும் வகையில் எடுக்கப்பட்ட முக்கியமான திரைப்படமாகும். ஆனால் படம் வெளியான பொழுது பெரிதாக அதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

முதல் படம்:

இந்த திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் ஜெயம் ரவியும் கூட நடித்திருந்தார். புலிகள் ஏன் காட்டுக்கு தேவையாக இருக்கின்றன என்பதை விளக்கும் வகையில் அந்த படம் இருந்தது. ஏனெனில் அந்த சமயத்தில் புலிகளின் எண்ணிக்கை என்பது குறைந்து கொண்டே வந்ததால் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அந்த திரைப்படத்தை எடுத்திருந்தனர்.

அதற்குப் பிறகு கீர்த்தி பாண்டியன் பெரிதாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்த நிலையில் அசோக்செல்வன் கதாநாயகனாக நடித்த ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் நடித்த பொழுது அவருக்கும் அசோக் செல்வனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

அந்த காதலே வளர்ந்து பிறகு திருமணத்தில் முடிந்தது. கீர்த்தி பாண்டியன் திருமணத்திற்கு பிறகு அதிகமாக திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டாத துவங்கினார். அந்த வகையில் ப்ளூ ஸ்டார் திரைப்படம் வெளியான அதே காலகட்டத்தில் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் கண்ணகி என்கிற திரைப்படமும் வெளியானது.

காதல் திருமணம்:

தொடர்ந்து கதாநாயகியாக ஆவதற்கான முயற்சியை எடுத்து வருகிறார் கீர்த்தி பாண்டியன். இந்த நிலையில் சமீப காலமாக கீர்த்தி பாண்டியன் அதிக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை பார்க்க முடிகிறது. தும்பா படம் வெளியாகி வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த காலகட்டத்தில் கூட கீர்த்தி பாண்டியன் இந்த மாதிரியான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடவில்லை.

ஆனால் திருமணத்திற்கு பிறகு இப்படி புகைப்படங்களை வெளியிடுகிறாரே என்று பலரும் இதுக்குறித்து பேசி வந்தனர். மேலும் இந்த விஷயம் குறித்து அசோக் செல்வன் எந்த ஒரு பதிலும் சொல்லாமல் இருக்கிறாரே திருமணமான தன்னுடைய மனைவி கவர்ச்சியாக தோன்றுவதில் அவருக்கு பிரச்சனை இல்லையா? என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்தன.

இந்த நிலையில் இது குறித்து பத்திரிகையாளர் சுபையர் கூறும் பொழுது அந்த காலகட்டங்களில் எல்லாம் நடிகைகள் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றால் பத்திரிகைகளுக்கு கவர்ச்சி புகைப்படங்களை அனுப்பி வைப்பார்கள். வெளியிடுவதன் மூலமாக நடிகைகளுக்கு அதிக வரவேற்பு கிடைக்கும்.

ஆனால் இப்பொழுது எல்லாம் அதையே சமூக வலைதளங்களில் செய்கின்றனர். அப்படித்தான் கீர்த்தி பாண்டியனும் சமூக வலைதளங்கள் மூலமாக வரவேற்பை பெறுவதற்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுகிறார். அதனால்தான் அசோக்செல்வனுமே கூட இந்த விஷயத்தை பெரிதாக கண்டு கொள்ளாமல் இருக்கிறார் என்று விளக்கி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version