சரத்குமாரின் முன்னாள் மனைவி இங்கே.. ராதிகாவின் முன்னாள் கணவர்கள் எங்கே.. பிரபலம் வெளியிட்ட பகீர் தகவல்..!

தமிழ் சினிமாவில் அனைவராலும் அறியப்படும் முக்கியமான பிரபலமாக இருப்பவர் நடிகர் சரத்குமார். விஜயகாந்த், சத்யராஜ் போன்ற நடிகர்கள் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை தேடி வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் அவர்களுடன் சேர்ந்து சினிமாவில் முயற்சி செய்து வந்தவர் சரத்குமார்.

ஆரம்பத்தில் சரத்குமாருக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் கிடைத்த வாய்ப்பை நழுவ விட வேண்டாம் என்று வில்லனாக நடித்து வந்தார் சரத்குமார். விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த புலன் விசாரணை திரைப்படத்திலேயே சரத்குமார் வில்லனாகதான் நடித்திருப்பார்.

அதற்கு பிறகு அவருக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது கதாநாயகனாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சரத்குமார். இப்போது வரை சரத்குமார் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான பிரபலமாக இருந்து வருகிறார்.

அரசியலில் களம் இறங்கிய சரத்குமார்:

இதற்கு நடுவே அரசியலிலும் ஈடுபாடு காட்டி வருகிறார் சரத்குமார். சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமாரும் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு பெற்ற நடிகை ஆவார். ஆரம்பத்தில் இவர் நடித்த திரைப்படங்களுக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் இப்போதெல்லாம் இவர் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

முக்கியமாக வில்லியாக இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு அதிக வெற்றி கிடைக்கிறது. சர்க்கார் திரைப்படத்தில் வில்லியாக சிறப்பாக நடித்திருந்தார் வரலட்சுமி சரத்குமார். அதனை தொடர்ந்து வந்த திரைப்படங்களிலும் அவருக்கு வில்லியாக நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தன.

இந்த நிலையில் சமீபத்தில் நிக்கோலய் என்கிற நபரை காதலித்து வந்தார் வரலட்சுமி சரத்குமார். இவர்கள் இருவருக்கும் சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. அதன் பிறகு சில காலங்களுக்கு இவர்களது திருமணம்தான் பேச்சாக இருந்து வந்தது.

கணவர்கள் ஏன் வரவில்லை?:

அவ்வளவு கோலாகலமாக இந்த திருமணம் நடந்தது. இந்த நிலையில் இந்த திருமணம் குறித்து சினிமா விமர்சனம் காந்தராஜ் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அந்த பேட்டியில் அவரிடம் கேட்கும் பொழுது சரத்குமாரின் முன்னாள் மனைவி வரலட்சுமி திருமணத்திற்கு வந்திருக்கிறார்.

ஆனால் ராதிகாவின் முன்னாள் கணவர்கள் யாரும் ஏன் இந்த திருமணத்திற்கு வரவில்லை என்று கேட்கப்பட்டது. ராதிகாவை பொருத்தவரை அவரது முன்னாள் கணவர் பிரதாப் போத்தன் இறந்துவிட்டார்.

அதற்கு பிறகு ஒரு வெள்ளையர் ஒருவரை திருமணம் செய்திருந்தார் ராதிகா அவரும் இப்பொழுது உயிருடன் இல்லை. சொல்ல போனால் ராதிகா யாரையும் திருமணத்திற்கு அழைக்கவில்லை. அதனால்தான் அவர்கள் யாரும் வரவில்லை விவாகரத்து செய்துவிட்டு மறுமணம் செய்வது சினிமாவில் சகஜமான விஷயம். ஏனெனில் ராதிகாவை பொருத்தவரை அவருக்கு நான்காவது கணவர்தான் சரத்குமார். அதேபோல சரத்குமாருக்கு மூன்றாவது மனைவிதான் ராதிகா என்று கூறியிருக்கிறார் டாக்டர் காந்தராஜ்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version