இதனால் தான் நான் கல்யாணம் பண்ணல..!வாயை விட்டு வம்பில் சிக்கிய நடிகை..

திரை உலகில் தற்போது அதிகரித்திருக்கும் விவாகரத்துக்கள் பேசும் பொருளாகி வருகின்ற சூழ்நிலையில் ஜெயம் ரவி, ஆர்த்தி விவாகரத்து விவகாரமானது தற்போது ரசிகர்களின் மத்தியில் சூடான விஷயமாக பேசப்பட்டு வருகிறது.

யாருமே எதிர்பார்க்காத வகையில் தனுஷ்- ஐஸ்வர்யா, ஜி வி பிரகாஷ்-சைந்தவி, தற்போது ஜெயம் ரவி- ஆர்த்தி போன்ற நட்சத்திர தம்பதிகள் அடுத்தடுத்து விவாகரத்து குறித்து விவரங்களை வெளியிட்டு வந்தது கடும் அதிர்வலைகளை திரைத்துறையில் ஏற்படுத்தி உள்ளது.

ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி விவாகரத்து..

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தன் மனைவியை விவாகரத்து செய்யப் போவதாக ஜெயம் ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சியை தந்தார்.

மேலும் இது குறித்து தன் நிலையை விளக்கி இருந்த ஆர்த்தி இதை பற்றி பேசும் போது ஜெயம் ரவி இது குறித்து தன்னிடம் கலந்து பேசாமல் தானாக முடிவெடுத்திருக்கிறார் என்று கூறி இருக்கிறார்.

மேலும் தனது 15 வருட திருமண வாழ்க்கையில் இதைத்தான் எதிர்பார்க்கவில்லை என்றும், தனக்கும் தன் குழந்தைகளுக்கும் என்ன பதில்.. எங்களின் எதிர்காலத்தை நினைத்து பார்க்க முடியவில்லை என்று எமோஷனலாக பேசியிருந்தார்.

இதனால் தான் நான் கல்யாணம் பண்ணல..

இந்நிலையில் தற்போது தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத்திகளும் பிரபல நடிகை திருமணம் செய்து கொண்டு மனக்கசப்புகள் ஏற்பட்டு விவாகரத்தை பெறுவதை பார்த்துத்தான் நான் இன்று வரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதை சொல்லி இருக்கிறார்.

மேலும் அவர் தனது திருமணத்தை பற்றி பேசும் போது தனக்கு ஏற்ற நபர் கிடைக்கும் வரை அந்த நிகழ்வுக்காக காத்திருப்பதாகவும் உடனடியாக திருமணம் செய்து கொண்டு இன்ஸ்டாண்டாக விவாகரத்து பெறுவதை தான் வெறுப்பதாகவும் எனவே தான் இன்னும் திருமணம் செய்யவில்லை என்று ஓபனாக கூறினார்.

அந்த பிரபல நடிகை யார் என்பது உங்களுக்கு தெரிய வேண்டாமா? அவர் வேறு யாரும் இல்லை. தனது இரண்டாவது இன்னிங்சில் களம் இறங்கி தற்போது லேடி சூப்பர் ஸ்டாருக்கு டப் கொடுத்து வரும் நம் திரிஷா தான்.

வாயை விட்டு வம்பில் சிக்கிய நடிகை..

அத்தோடு தனக்கு ஏற்ற அந்த நபர் கிடைக்கும் வரை காத்திருப்பதில் தவறு இல்லை என்று வாய்விட்டு வம்பில் சிக்கி விட்டார். இதனை எடுத்து ரசிகர்கள் அனைவரும் 40 வயது தாண்டியும் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு இது தான் காரணமா? என்று கேள்விகளை முன் வைத்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி திரிஷாவின் இந்த பேச்சு பற்றி பேசி வருகிறார்கள். மேலும் சிலர் திரிஷா பேசியதில் உண்மை உள்ளது என்று பலரும் சொல்லி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version