குளிர்காலம் என்றாலே நமது சரும அழகை பராமரிப்பதில் அதிக அக்கறை காட்ட வேண்டும். அந்த வகையில் சரும பராமரிப்பு பற்றி பலருக்கும் பலவிதமான கருத்துக்கள் மற்றும் அதை பாதுகாக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது நன்கு தெரியும்.
அதே சமயம் நம் கால்களிலும், கைகளிலும் இருக்கும் நகங்களை எப்படி சேதம் அடையாமல் பாதுகாக்க வேண்டும் என்ற டிப்ஸ் தெரிந்திருக்க அதிக வாய்ப்பு இல்லை.
அந்த நகங்களை நீங்கள் எப்படி பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விளக்கமாக பார்க்கலாம்.
ஆகவே எல்லோரும் சருமத்திற்கும் மட்டும்தான் மாயசரைசத் தேவை என்று நினைத்திருக்கிறோம். ஆனால் அது தவறு உங்கள் நகங்களுக்கும் மாயசரைசர் இருந்தால் தான் அது ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும்.
அதற்காக உங்கள் நகங்களுக்கு தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயை தடவி அதற்கு தேவையான ஈரப்பதத்தை நீங்கள் கொடுக்கலாம்.
மேலும் நீங்கள் நகத்தில் தூசி, அழுக்கு,மாசு ஏற்படாமல் தடுப்பதற்காக நிறமற்ற நெயில் பாலிசு அடித்து விடலாம். இல்லையென்றால் இயற்கையாக கிடைக்கும் மருதாணியை ஈட்டு விடுவதின் மூலம் நகத்தின் அழகு பாதுகாப்பாக இருப்பதோடு நகத்தில் சொத்தைகள் ஏற்படாமல் இருக்கும்.
மேலும் நகத்தை வெட்டும்போது அடியோடு வெட்டி விடாமல் சிறிது இடைவெளி விட்டு வெட்டுவது மிகவும் நல்லது .அப்படி நகத்தை வெட்டிய பின்பு நீங்கள் நகங்களுக்கு அடியில் எண்ணெய் அல்லது லோஷங்களை தடவி விட்டால் நகம் மற்றும் நகத்துக்கு அடியில் இருக்கக்கூடிய தோல் சேதமாகாமல் இருக்கும்.
வீட்டில் இருக்கும் பெண்கள் பாத்திரம் கழுவும் போது அடிக்கடி நீர் அதிகமாக கைகளில் சேரும் அதை தடுப்பதற்காக நீங்கள் கையுறைகளை போட்டுக்கொண்டு கழுவும் போது நகங்கள் சேதம் அடைவதும் அதிகளவு ஈரப்பதம் ஏற்படுவதும் தடுக்கப்படும்.
குளிர்காலங்களில் நீங்கள் மெனிக்யூரை தவிர்ப்பது மிகவும் நல்லது ஏனெனில் நீண்ட நேரம் உங்கள் கைகளை தண்ணீரில் வைக்க வேண்டிய சூழ்நிலையை இந்த மெனிக்யூர் ஏற்படுத்துவதால் நீங்கள் அதைக் கோடையில் செய்து விடுவது தான் மிகவும் சிறப்பாக இருக்கும்.
முகங்களுக்கு எப்படி மாஸ் போடுகிறோமோ அதுபோல் நகங்களுக்கும் முட்டை, தேன் மற்றும் எலுமிச்சை இந்த மூன்றையும் கலவையாக செய்து அந்த கலவையை மாஸ் போல நகங்களின் மீது வைத்துக் கொள்ளலாம்.
இது உங்கள் நகத்தை வலிமையாக்குவதோடு மிக விரைவில் உடைய கூடிய தன்மையிலிருந்து காத்துக் கொள்ள உதவும்.