“காளி தேவி பற்றிய விஷயங்கள் உண்மையா..!” – ஒரு அலசல்..!

பன்னெடுங்காலமாக இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் காளி தேவி வழிபாடு பரவி உள்ளது. முதலில் காளி என்ற பெயரில் இருக்கும் அர்த்தம் என்ன என்று தெரிந்து கொள்ளலாம் .அது மட்டும் அல்லாமல் அந்த சொல் எதிலிருந்து வந்தது என்றும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில் காளி என்ற சொல் வடமொழியில் இருக்கின்ற காலா என்ற ஆண் பெயரின் பெண்பால் பெயர் என்று கூறலாம். மேலும் காளி தேவியானவள் காலத்தின் மாறுதல்களுக்கு ஏற்ப நமக்கு நன்மைகளைத் தரும் தெய்வமாக கருதப்படுகிறாள்.

kalidevi

காளி என்ற சொல்லுக்கு கருப்பு, காலம் என்ற பொருளும் உண்டு. எனவே ஈசனின் ரூபமான காலனின் துணைவி தான் இந்த காளி என்று கூறுகிறார்கள்.

இந்த காளியை வழிபாடு செய்பவர்கள் மனதில் எப்போதும் நல்லதையே நினைத்து இருக்க வேண்டும். மிகவும் உக்கிரமான காளி தேவியை வழிபடும்போது பய பக்தியோடு வழிபட வேண்டும். இல்லையெனில் அவளின் உக்கரத்திற்கு நீங்கள் ஆளாக நேரிடும்.

பொதுவாக காளி பூஜையை இரவு நேரங்களிலேயே செய்து இருக்கிறார்கள். குறிப்பாக இரவு எட்டு மணியிலிருந்து பத்து மணிக்குள் நீங்கள் காளி பூஜையை செய்யலாம்.

kalidevi

காளி தேவி பற்றி எண்ணற்ற சந்தேகங்கள் உள்ளது. இந்த தேவி ஞானத்தின் வடிவமா? அல்லது தாந்திரீகத்தின் தேவதையாய் என்று பலருக்கும் ஐயம் உள்ளது. எனினும் காளி வழிபாடு சக்தி வழிபாட்டின் முதன்மை என்று கூறலாம்.

பார்ப்பதற்கு அனைவரும் பயம் கொள்ளும்படி இருந்தாலும், நம்மை மாயையில் இருந்து காக்கின்ற தாயாகவே காளி தேவி விளங்குகிறாள். தமிழகத்தை பொறுத்தவரை ஐவகை நிலங்களில் பாலை நிலத்தின் காவல் தெய்வமான கொற்றவை தான் காளியாவாள்.

kalidevi

காளியை வழிபடுவதன் மூலம் ஆற்றல், சக்தி, வீரம், ஆளுமை, தாய்மை, அன்பு கோபம், என அனைத்தும் கிட்டும். மேலும் காளியை காணும் போது காலனும் அஞ்சுவான் என்று காளி தேவியின் சிறப்பை பற்றி கூறியிருக்கிறார்கள்.

காளியின் அருளை பெற்றவர்களான காளிதாசர், கவிச்சக்கரவர்த்தி கம்பர், ஒட்டக்கூத்தர், வீரசிவாஜி தெனாலிராமன் போன்றவர்களை நான் இன்றும் மறவாமல் இருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் காளிதான்.

எனவே காளி என்றால் மாந்திரீகத்துக்கு பயன்படும் சுவாமி என்ற எண்ணத்தை விடுத்து நம்பிக்கையோடு காளியை பூஜித்து வந்தால், கட்டாயம் உங்களுக்கு ஞானம் மட்டுமல்லாமல் அனைத்து விதமான ஆளுமையும் வந்து சேரும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …