கௌதமி நடிகர் கமல் என்ன செய்ததை பார்த்து மகளை தனியாக அழைத்து சென்றார் தெரியுமா..?

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் பல்வேறு மொழிகளில் தனது அபார நடிப்புத் திறமையின் மூலம் ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட நடிகை கௌதமி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இவர் திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் 1997-ஆம் ஆண்டு பாஜக உறுப்பினராக மாறிய இவர் அட்டல் பிகாரி வாஜ்பாய் அவர்களுக்காக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் பிரச்சாரம் செய்திருக்கிறார்.

நடிகை கௌதமி..

நடிகை கௌதமியின் நடிப்பில் வெளி வந்த ரிக்ஷா மாமா, பணக்காரன், குரு சிஷ்யன், அபூர்வ சகோதரர்கள், ராஜா சின்ன ரோஜா, ராஜா கைய வச்சா, ருத்ரா, தேவர் மகன், நம்மவர் போன்ற படங்கள் கௌதமியின் நடிப்பை எடுத்துக்காட்டும் வகையில் இருந்தது.

சினிமாவில் பீக்கில் இருக்கும் போதே அமெரிக்காவில் இருக்கும் மாப்பிள்ளை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகளும் இருக்கிறார். இந்நிலையில் முதல் திருமணம் தோல்வி அடைந்ததை அடுத்து விவாகரத்து பெற்று சென்னையில் வசிக்க ஆரம்பித்தார்.

இதனை அடுத்து புற்றுநோயின் தாக்கம் இருப்பதை அறிந்து கொண்ட கௌதமி அதற்கு உரிய சிகிச்சைகள் எடுத்து வரும் போது கமலஹாசனோடு இணைந்து நம்மவர் திரைப்படத்தில் நடித்ததை அடுத்து அவருக்கு ஆதரவாக கமல் இருக்க இருவரும் லிவிங் டுகதர் முறையில் வாழ ஆரம்பித்தார்கள்.

கமல் அப்படி என்ன செய்தார்..

பல ஆண்டுகளாக கமலஹாசனோடு லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்து வந்த கௌதமி திடீரென தனது மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கமலை விட்டு விலகுவதாக அறிவித்தார்.

அது மட்டுமல்லாமல் இவர் கமலோடு இணைந்து இருந்த கால கட்டத்தில் ஆடை வடிவமைப்பாளராக ராஜ்கமல் நிறுவனத்திற்கும், கமல் நடித்த தசாவதாரம் போன்ற படங்களிலும் பணியாற்றி இருக்கிறார்.

அப்படி அவர் பணியாற்றிய சமயத்தில் அவருக்கு உரிய சம்பள பணத்தை இன்னும் கொடுக்கவில்லை என ஒரு பேட்டியில் சொல்லியிருக்கும் கௌதமி இது நிமித்தமாக கமலஹாசன் இடமும் ராஜ் கமல் நிறுவனத்திடமும் பேசி உள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மகளை அழைத்துச் செல்ல காரணம்..

இந்நிலையில் கமலை விட்டு பிரிய காரணம் அவரது மகள் ஸ்ருதிஹாசன் என்ற செய்திகள் இணைய தளங்களில் பல்வேறு வகைகளில் வெளி வந்தது. ஆனால் அது உண்மையல்ல தனது மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தான் கமலை விட்டு பிரிந்ததாக கூறினார்.

மேலும் தன் மகளின் படிப்புக்காகவும், வருங்காலத்துக்காகவும் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் கௌதமி பல்வேறு வகைகளில் பணிகளை ஆற்றி வருவதாக சொல்லி இருக்கிறார்.

இந்நிலையில் கமலஹாசனின் கவிதை தொகுப்புகளை வெளியிடக்கூடிய இணையத்தில் பணியாற்றியவர் அந்த பணியையும் விட்டுவிட்டார்.

அப்படி அவர் பணி செய்த போது அதற்குரிய ஊதியத்தையும் கமலஹாசன் கொடுக்கவில்லை என்று கூறிய இவர் பல சூழ்நிலைகளில் கமலுக்கு பக்கபலமாக இருந்த நான் எனது மகளின் எதிர்காலத்திற்கு கமலால் எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டதனால் பிரிந்ததாக சொல்லி இருக்கிறார்.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது. இதனை அடுத்து நடிகை கௌதமி தன் மகளை தனியாக அழைத்துச் செல்ல இது தான் காரணம் என்ற விஷயத்தை ரசிகர்கள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version