“யாரடி நீ மோகினி படத்தில் தனுஷிற்கு நயன்தாரா….” சுசித்ரா தூக்கி போட்ட புது குண்டு..!

கடந்த 10 நாட்களுக்கு மேலாகவே பாடகி சுசித்ரா வெளியிடுகின்ற ஒவ்வொரு செய்தியும் இணையங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வரக்கூடிய வேளையில் தற்போது புதிதாக பதிவிட்ட செய்தியால் இணையம் பற்றி எரிகிறது.

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷ் நடிப்பில் 2008-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் தான் யாரடி நீ மோகினி. இந்த திரைப்படத்தில் தனுஷ், நயன்தாரா மற்றும் பல நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

யாரடி நீ மோகினி..

மேலும் இந்த படத்தில் வாசுவாக தனுஷ், கோமளவள்ளியாக நயன்தாராவும் நடித்து அசத்தியிருந்தார்கள். இந்த படத்தின் தயாரிப்பை என்வி பிரசாத் அசோக்குமார் செய்திருக்க ஏ ஜவஹர் இயக்கியிருந்தார்.

யுவன் சங்கர் ராஜா இசையில் வெளி வந்த இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களின் மத்தியில் மிக நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக நா முத்துக்குமார் எழுதிய எங்கேயோ பார்த்த என்ற வரிகளில் துவங்கும் பாடல் ரசிகர்களின் மனதில் என்றும் முணு முணுக்கப்படுகின்ற பாடல் வரிகளாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவில்லை. எனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் தான் நடித்திருக்கிறார் என்ற ஒரு பகிரங்க குண்டை தூக்கிப்போட்டு பெரிய பரபரப்பை சுசித்ரா ஏற்படுத்தி இருக்கிறார்.

ஏற்கனவே இவர் தன் முன்னாள் கணவர் ஓரினச்சேர்க்கையாளர் அவருடைய பார்ட்னர் தனுஷ் ஆக இருக்கலாம். ஏனென்றால் வீட்டில் இருக்கும் போது அவர்கள் இருவரும் தனி அறையில் வெகு நேரம் தனியாக இருந்தார்கள் என்பது போன்ற விஷயங்களை வெளியிட்டு கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.

தனுசுக்கு ஹீரோயின் நயன் இல்ல..

இதற்கு பதிலடி தருவது போல நான் அப்படிப்பட்ட ஓரின சேர்க்கையாளர் என்றால் அதைப் பற்றி பொது வெளியில் சொல்ல நான் வெட்கப்படவில்லை என்பது போன்ற கருத்துக்களை கார்த்திக் குமார் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பாடகி சுசித்ராவின் இந்த நிலைமைக்கு காரணம் தனுஷ், திரிஷா மற்றும் அவரது கணவர் தான் எனவும் பழி ஒரு பக்கம் இருக்க பாவம் ஒரு பக்கம் வந்து விட்டது என்ற சொற்றொடர்க்கு ஏற்ற சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் தன்னை சிக்க வைத்து விட்டார்கள் என சொல்லி இருக்கிறார்.

இப்படி பல்வேறு வகையான விஷயங்கள் பல்வேறு கோணங்களில் ஒவ்வொரு நாளும் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் மட்டுமல்லாமல் வெகு ஜனங்களின் மத்தியிலும் பேசும் பொருளாக இருக்க கூடிய பாடகி சுசித்ராவிற்கு மனநிலை சரியில்லை என்று அவரது முன்னாள் கணவரே கூறிய விஷயம் நினைவு கூற தக்கது.

புது குண்டை போட்ட சுசித்ரா..

இந்நிலையில் தான் பாடகி சுசித்ரா தற்போது மீண்டும் புதிய குண்டு ஒன்றை தூக்கி போட்டு இணையத்தை திணறடித்து விட்டார். அந்த வகையில் அவர் யாரடி நீ மோகினி படத்தில் தனுஷுக்கு நயன்தாரா ஜோடி கிடையாது. தனுஷுக்கு கார்த்திக் குமார் தான் ஜோடி எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் தன்னைக் கேட்டால் யாரடி மோகினி படத்தின் ஹீரோயின் கார்த்திக் குமார் என கூறுவேன் என புதிய குண்டை தூக்கிப்போட்ட பாடகி சுசித்ராவின் இந்த பதிவானது ரசிகர்களின் மத்தியில் கலவை ரீதியான விமர்சனங்களை தொடர்ந்து பெற்று வருவதால் இந்த விஷயம் இணையத்தில் தற்போது ட்ரெண்டிங் ஆகிவிட்டது.

மேலும் பாடகி இது போல இன்னும் என்னென்ன விஷயங்களை வைத்திருக்கிறாரோ? என்ற ரீதியில் ரசிகர்கள் அனைவரும் அவர் பேசுவதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் அவர்களுக்குள் தர்க்கம் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version