யானைப் படத்துக்குப் பிறகு அடுத்தடுத்து ரிலீஸ் ஆக இருக்கும் அருண் விஜய் படங்கள்.

குணசித்திர நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய் ஆரம்ப கட்டத்தில் இவர் சினிமாவில் அடியெடுத்து வைத்தபோது பெரும்பாலான படங்கள் தோல்வியை தழுவியது எனினும் இவரின் விடா முயற்சி காரணமாக இன்னும் திரைத்துறையில் இருப்பது மிகவும் வியப்பான விஷயமே.

ஆரம்ப நாட்களில் இவர் நடித்து வந்த மலை மலை, மஞ்சா வேலு  படங்கள்  எதிர்பார்த்த வெற்றியை இவருக்கு தரவில்லை.

சேரன் இயக்கத்தில் பாண்டவர்பூமி படத்தில் அருண் விஜய்யின் கேரக்டர் பேசும் படியாக இருந்தது. அந்த படத்தைப் பார்த்தவர்கள் இவரையும் ஒரு நடிகர் என்பதை ஒப்புக்கொள்ளும் வகையில் இவரது நடிப்பு இருந்ததாகக் கூறுகிறார்கள்.

இவரது திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் “என்னை அறிந்தால்”  இதை கௌதம் மேனன் இயக்கி இருந்தார். அஜித்துக்கு வில்லனாக நடித்த இவரின் நடிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதனையடுத்து குறிப்பிட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் வெளியான யானை படம் பெருவாரியான வெற்றியை இவருக்குப் பெற்றுத் தந்தது.

ஊரடங்கு காலகட்டத்தில் இவரது படங்கள் எதுவும் வெளிவராத சூழ்நிலையில் தற்போது  இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளிவருவதாக உறுதியான தகவல்கள் வந்துள்ளது. அந்தவகையில்  ஜி என் ஆர் குமரவேல் அவர்களின் இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள சினம் என்ற படம் செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி வெளிவர உள்ளதாக கூறுகிறார்கள்.

 மேலும் மற்றொரு படமான அறிவழகன் இயக்கத்தில் வர உள்ள விஜய் சேதுபதி நடித்த பார்ட்னர் என்ற படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளிவரும் என்று சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

 மாஸ் ஹீரோக்களின் படங்களை அடுத்தடுத்து வெளிவராத நிலையில் அருண்விஜயின் படம் வெளிவர உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள் இந்த இரண்டு படமும் அவருக்கு கைகொடுக்குமா இல்லை வழக்கம்போல் ஆகிவிடுமா.

ஒரு நடிகரும் வாரிசு நடிகராக இருந்தால் மட்டும் போதாது அவற்றை அதிர்ஷ்டமும்  மக்களால் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலையில் இருந்தால் மட்டுமே அவர்கள் திரையுலகில் ஜொலிக்க முடியும்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …