தற்போது பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள யசோதா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மிகவும் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்தப் படத்தில் நடிகை சமந்தா முக்கிய கதாநாயகியாக நடித்து கலக்கி இருக்கிறார்.
தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு ,கன்னடம் மலையாளம் போன்ற மொழிகளில் இந்த படம் வரும் நவம்பர் 11ஆம் தேதி வெளியாகும் என தெரிகிறது.
மேலும் இந்தப் படத்தில் முக்கிய ரோல்களில் உன்னி முகுந்தன் வரலட்சுமி சரத்குமார் போன்ற பல நடித்து இருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் கதைக்களம் வாடகை தாய்க்கு ஏற்படும் பிரச்சனைகளை பற்றி கூறுவதாக கூறியிருக்கிறார்கள். மேலும் படத்தில் வாடகை தாயாக நடிகை சமந்தா நடித்திருக்கிறார்.
என்றாவது உள்ளுக்குள் இரண்டு இதயம் துடிப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? கர்ப்பமான அம்மாவால் மட்டும் தான் இதை உணர முடியும் என்ற பீலிங்ஸ் உடன் நடிகை சமந்தாவின் குரலில் ஆரம்பிக்கிறது.
இதை எடுத்து ஒரு வாடகை தாய் எவ்வாறெல்லாம் பிரச்சனைகளை எதிர்நோக்குகிறார் அவருக்கு என்னவெல்லாம் நிகழ்கிறது என்பதை சுற்றியே கதையின் களம் அமைந்திருக்கிறது.
இதில் அந்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்கக்கூடிய கதாபாத்திரத்தை விக்ரம் படத்தில் ஏஜென்டாக நடித்த கேரக்டரைப் போல் சமந்தா கடைசியில் ஒவ்வொருவரையும் குத்திக் கொல்வது படும் மிரட்டலாக இருக்கிறது.
எனவே இந்த படத்தின் மீது அதிக தற்போது ரசிகர்களிடையே எகிறி உள்ளது. இந்தப் படத்தின் மூலம் அதிக அளவு ரசிகர்களின் கவனத்தை மட்டுமல்ல இந்திய சினிமாவையே புரட்டிப் போடும் அளவுக்கு இவரது பெயர் விளங்கும் என்று திரை உலக வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளது.
தற்போது பாலிவுட் கோலிவுட் டோலிவுட் என்று அனைத்து பகுதிகளிலும் இந்த வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றுக் கொள்வது பிரபலமாகி வருகின்ற வேளையில் அதை மையமாக வைத்து தற்போது வெளிவரமுள்ள எந்த படத்தில் வாடகத்தாயின் நிலை பற்றி தெள்ளத் தெளிவாக கூறியிருப்பதால் ரசிகர்கள் அனைவரும் இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி அடையும் என பேசிக்கொள்கிறார்கள்.