கை நிறைய படங்கள் … கலக்கும் காமெடி நடிகர் யோகிபாபுக்கு அடித்தது யோகம்… வரிசைகட்டி அடிக்கிறரா?

நகைச்சுவை நடிகர்கள் என்றாலே நமக்கு நன்கு தெரிந்தவர்கள் கவுண்டமணி-செந்தில்  அதற்கடுத்தது போர் வருபவர் வைகைப்புயல் வடிவேலு இவர்களுக்குப் பின் வந்தவர்தான்  சந்தானம் இவர் தற்போது காமெடியனாக நடிப்பதை நிறுத்திவிட்டு கதாநாயகனாக நடித்ததால்  காமெடி செய்யக் கோரிய நடிகர்களின் வரிசையில் பற்றாக்குறை ஏற்பட்டது.

 இந்த பற்றாக்குறையை பட்டாசை போல வந்து நிரப்பிவிட்டு மக்களை சிரிக்க வைக்கக்கூடிய காமெடியன் வரிசையில் புதிதாக இடம் பிடித்தவர்கள் தான் யோகிபாபு மற்றும் சூரி.

 வருடத்திற்கு 25 படங்கள் நடிக்கக்கூடிய கதாநாயகர்களை நமக்கு நன்கு தெரியும் ஆனால் ஒரு காமெடியன் வருடத்திற்கு நாற்பத்தி ஐந்து படங்கள் நடிக்கிறார் என்றால் அது நமது காமெடி கிங் யோகி பாபு தான். பார்த்தாலே நமக்குள் சிரிப்பு தானாக வரும் அந்த மாதிரியான உடலமைப்பு கொண்டவர்கள் யோகி. பெயரைப் போலவே அவரது குணமும் மிகவும்  சிறப்பாக இருக்கும்.

 டைரக்டர் அமீரின் யோகி படத்தில் அறிமுகமானவர். அடுத்ததாக இவர் டைரக்டர் சுந்தர் சியுடன் இணைந்து கலகலப்பு படத்தில் மிகவும் கலகலப்பாக நடித்ததால் மக்கள் மத்தியில் பேசப்பட்டார். இதனை அடுத்து இவருக்கு படவாய்ப்புகள் குவிந்தது.

 தற்போது  சூரி சதீஷ் இவர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு யோகிபாபு  பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் இவர் தற்போது ஒரு காமெடியன் என்ற நிலையிலிருந்து மாறி கதாநாயகனாகவும் சில கேரக்டர்களை செய்கிறார்.

 சுருக்கமாகச் சொன்னால் யோகிபாபுவின் கையில் தற்போது 45 படங்கள் உள்ளது இந்த 45 படங்களில் இவர் 15 படங்களில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக செய்திகள் அதிகாரப்பூர்வமாக கூறுகிறது.

 இது ஒரு சிறப்பு என்னவென்றால் ஒரு படத்துக்கான கதையை இவரை எழுதி நடிக்கிறாராம். இப்போது நானே வருவேன்,தாதா, கோல்மால், காபி வித் காதல், பொம்மை நாயகி, மாவீரன், சுமோ, மெடிக்கல் மிராக்கள், ஓ மை கோஸ்ட், பூமர் அங்கிள், அந்தகன், ஜெயிலர், வாரிசு, பார்ட்னர், அயலான் போன்ற படங்களில்  நடித்துள்ள இவரது படங்கள் அடுத்தடுத்து வெளிவரக்கூடிய நிலையில் உள்ளது.

 இப்போது சொல்லுங்கள் யோகிபாபுவின் ஜாதக கட்டத்தில்  விபரீத ராஜ யோகம் இருக்கிறது போல அதனால்தான் இப்படி பல படங்களில் கமிட்டாகி  அசத்தி வருகிறார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …