வந்தாச்சு… வந்தாச்சு…வின் யோகி பாபு பூமர் அங்கிள் ட்ரெய்லர்…!! வெளியிட்டார் மிஸ்கின்…!!

தற்போதைய காலகட்டத்தில் திரையுலகில் நகைச்சுவையால் கலக்கி வரும் ட்ரெண்டிங்கான நடிகர் யார் என்று கேட்டால் யோகி பாபு என்று தான் பதில் சட் என்று வரும்.

அந்த வகையில் ரசிகர்களை பெரிதும் தனது நடிப்பின் மூலமும் பாடி லாங்குவேஜ் மூலமும் கவர்ந்து ஈர்த்து உள்ளவர். இவர் தற்போது இவர் பூமர் அங்கிள் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் இவரோடு ஓவியா, ரோபோ சங்கர், சேனா உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த திரைப்படமானது உருவாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படமானது ஒருவித ஹாரர் காமெடி கதை என்று கூறலாம்.

இந்த படத்தை கார்த்திக் தில்லை என்பவர் இயக்கி இருக்கிறார். மேலும் இந்தப் படத்தின் டிரைலரை இயக்குனர் மிஷ்கின் வெளியீட்டு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறார் என கூறலாம்.

 இந்தப் படத்தில் யோகி பாபு உடன் ஓவியா கவர்ச்சிகரமான ஒரு தோற்றத்தில் நடித்திருக்கும் காட்சி இதில் இடம் பெற்றுள்ளது குறிப்பாக ஓவியா கவர்ச்சிகரமான ஆவி வேடத்தில் தான் நடித்திருக்கிறார்.

 ஏற்கனவே இந்த படத்திற்கு காண்ட்ராக்டர் நேசமணி என்ற டைட்டில் வைத்திருந்தார்கள். ஆனால் அந்த டைட்டில் வடிவேலு தனக்கு வேண்டும் என்று கேட்டுக்கொண்டதை அடுத்து பூமர் அங்கிள் என்று டைட்டிலை மாற்றிவிட்டார்கள்.

அதுமட்டுமல்லாமல் எந்த படத்தின் கேரக்டர்களுக்கும் வொண்டர் வுமன், ஜோக்கர், ஹால்க் என ஹாலிவுட் படங்களில் தோன்றும் கேரக்டர்களின் பெயர்களை வைத்திருப்பது புதுமையாக இருந்தது.

 மேலும் இது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருவதை அடுத்து யோகி பாபு கதையின் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பதை தெரிந்து விட்டது.

மேலும் ஹாரர் மூவியில் காமெடியா என்று ரசிகர்கள் எந்த திரைப்படத்தை காணக்கூடிய ஆவலில் தற்போது காத்திருக்கிறார்கள். ஏற்கனவே அண்ணன் யோகி பாபுவின் நடிப்பை பற்றி நாம் பேச வேண்டிய அவசியமே இல்லை.

தற்போது கூடவே ஓவியாவும் இணைந்து இருப்பதால் கிளாமருக்கும் ஹாரருக்கும் காமெடிக்கும் பஞ்சமே இருக்காது என்று ரசிகர்கள் அவர்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …