என்னது யோகி பாபு தெலுங்கு சினிமாவில் நடிக்கப் போகிறாரா? வாய்ப்பு கிடைத்து விட்டதா?

 திரையுலகில் கவுண்டமணி செந்திலுக்கு பின்னால் காமெடிகளில் சோலோவாக கலக்கி வரக்கூடிய மிகப் பெரிய அந்தஸ்தில் இருக்கக்கூடிய காமெடி நடிகர்தான் யோகி பாபு.

காமெடி நடிப்பில் மட்டுமல்ல இவர்  குணசித்திர நடிப்பிலும் மிகச் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய  தன்மை கொண்டவர்.

 சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த லவ் டுடே திரைப்படம் சக்கை போடு போட்டு வருவதோடு மட்டுமல்லாமல் வசூலையும் வாரி குவித்து வருகிறது. இப்படம் மிகச் சிறிய பட்ஜெட்டில் உருவான படம் இவ்வளவு பெரிய வெற்றியை அடையும் என்று எவரும் எண்ணவில்லை.

 இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரப்பேற்பை பெற்றிருக்கிறது. ஏற்கனவே யோகி பாபு இவர் நடிப்பில் வெளியான காக்கிச்சட்டை,வேதாளம் ,ரெமோ, சர்க்கார், விசுவாசம், கூர்கா போன்ற படங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது போல இந்த படத்திலும் அதை சிறப்பாக செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

 மேலும் யோகி பாபு அஜித், சிவகார்த்திகேயன், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்க கூடிய இவர் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத காமெடி நடிகரின்  வரிசையில் முதலாவதாக வரக்கூடிய நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்நிலையில் இவர் தெலுங்கில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. அதாவது பிரபல நடிகர் பிரபாஸ் புதிய படம் ஒன்றில் நடித்து வருவதாகவும் இதில் நகைச்சுவை வேடத்தில் தான் இவர் நடிக்கிறார் என்பது தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

யோகி பாபு விரைவில் கதை எழுதி திரைப்படம் எடுக்க உள்ளார் என்பது இதில் ஹைலைட்டான விஷயமாக இருக்கிறது.இதனை அடுத்து தமிழில் பட்டையை கிளப்பி வந்த நகைச்சுவை நடிகர் யோகி பாபு இனி தெலுங்குலும் பட்டையை கிளப்புவார் என்று ரசிகர்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.

 அடுத்து தெலுங்கு ரசிகர்களும் அவரது படத்திற்காக ஆவலாக காத்திருப்பதாக தெலுங்கு திரை உலக வட்டாரங்களில் இருந்து முக்கியமான செய்திகள் தற்போது வந்திருக்கிறது.

 திறமை இருக்கும் நபர் எவர் என்றாலும் அது எந்த மொழியானாலும் அவருக்கு அது தடை அல்ல என்பது இதன் மூலம் விளங்கி விட்டது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …