கலக்கலான கதைக்களத்தில் யோகி பாபு நடிக்கும் தூக்குதுரை…!!

பார்த்தாலே கலகலப்பை ஏற்படுத்தக் கூடிய முக ஜாடையில் இருப்பவர்தான் யோகி பாபு. காமெடி கேரக்டர்  மற்றும் ஜனரஞ்சகமான கேரக்டர்களில் அசாத்திய திறமையோடு நடித்து ரசிகர்களை கட்டிப்போடும் சக்தி மிக்கவர் இவர் என கூறலாம்.

 காமெடி ரோல்  செய்து வருவதோடு மட்டும் அல்லாமல் தற்போது இவர் கதாநாயகன் ரோலையும் பக்காவாக செய்து வருகிறார் .அந்த வரிசையில் இவர் தற்போது கதாநாயகனாக நடிக்க இருக்கக்கூடிய திரைப்படம் தான் தூக்குத் துரை. இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை இனியா நடிக்க இருக்கிறார்.

மேலும் இந்தத் திரைப்படத்தை அட்வென்ச்சர் த்ரில்லர் படமான ‘ட்ரிப்’ படப்புகழ் டென்னிஸ் மஞ்சுநாத் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படமானது மூன்று காலகட்டங்களை எடுக்கப்படக்கூடிய படமாக இருக்கும்.

அதாவது இந்த 19 -ஆம் நூற்றாண்டு காலகட்டமும் 1990 மற்றும் தற்போது உள்ள காலகட்டங்கள் என்று மூன்று நிலைகளில் படப்பிடிப்புகள் நடக்க இருப்பதாகவும் அதற்கு ஏற்றபடி தான் கதை அம்சமும் உள்ளதாகவும் இயக்குனர் கூறி இருக்கிறார்.

 இந்தப் படத்தில் யோகி பாபு உடன் இணைந்து மொட்ட ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்றாயன், மாரிமுத்து, நமோ நாராயணன், அஷ்வின், சத்யா, சீனியம்மா  போன்ற முக்கிய நடிகர்கள் நடிக்க இருப்பதால் படம் கலை கட்டும் என கூறலாம்.

எனவே மூன்று வித காலகட்டங்களில் இந்த படம் படம் பிடிக்க இருப்பதால் இந்த படத்தில் நிச்சயமாக யோகி பாபு தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் இப்போதே குஷியாகி விட்டார்கள்.

இதனை அடுத்து ரசிகர்கள் இப்போதே மூன்று கால கட்டங்கள் என்றால் கதை அம்சம் எப்படி இருக்கும் என்ற கணக்குகளில் அவர்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

மேலும் இந்த திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என்பது போன்ற கேள்விகளை இப்போதே கேட்க தொடங்கி இருக்கிறார்கள். இதற்கான பதிலை விரைவில் படக்குழு அறிவிக்கும் என தெரியவந்துள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …