கேமராவ ஆஃப் பண்ணிட்டு வா பேசறேன்.. அதான் மன்னிப்பு கேட்டேன்ல.. கடுப்பாகி கிளம்பிய யோகி பாபு..!

தற்போது ஒரு மிகச்சிறந்த காமெடி நடிகனாக வளர்ந்திருக்கும் நடிகர் யோகி பாபு நகைச்சுவை நடிகராக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்திருக்கிறார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த மான் கராத்தே, யாமிருக்க பயமே போன்ற படங்களில் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

கேமராவை ஆஃப் பண்ணிவிட்டு வா பேசுறேன்..

2009-ஆம் ஆண்டு வெளிவந்த யோகி, சிரித்தால் சிரிப்பேன் போன்ற படங்களில் நடித்த இவர் 2010-இல் தில்லாலங்கடி, 2011-இல் வேலாயுதம், தூங்கா நகரம், 2012-இல் கலகலப்பு, அட்டகத்தி, 2013-இல் பட்டத்தை யானை, சூது கவ்வும், சென்னை எக்ஸ்பிரஸ், 2014-இல் வீரம், மான் கராத்தே, என்னமோ ஏதோ, அரண்மனை, ஜெய்ஹிந்த், யாமிருக்க பயமே போன்ற படங்களில் தொடர்ந்து நடித்திருக்கிறார்.

இப்போது யோகி பாபுவுக்கு என்று ஒரு தனி ரசிக்கப்பட்டாரம் இருப்பதோடு மட்டுமல்லாமல் இவர் தெலுங்கு படத்திலும் நடித்து அசத்தியவர்.

இதனை அடுத்து போட் பிரஸ்மீட்டில் நடிகர் யோகி பாபு கலந்து கொண்டு மன்னிப்பு கேட்ட வீடியோவானதே இணையங்களில் வைரலாக பரவி வருகிறது. இது பற்றிய விரிவான பதிவினை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

அதுதான் மன்னிப்பு கேட்டேன்ல..

நடிகர் யோகி பாபு தற்போது பிசியான செட்யூலில் இருந்தாலும் தன்னுடைய வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்த ஊடகத்துறை நண்பர்களை கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த பிரஸ்மீட்டில் கலந்து கொண்டு இருப்பதாக கூறியதை அடுத்து இந்த பிரஸ்மீட் முடித்தவுடன் முட்டுக்காட்டுக்கு ஷூட்டிங் செல்ல வேண்டிய நிலையில் இருப்பதாகவும் சொன்னார்கள்.

இதைத் தொடர்ந்து யோகி பாபு பேசும் போது போட் படமானது மிகவும் சிறப்பான முறையில் வந்திருக்கிறது என்றால் அதற்கு மிகவும் முக்கிய காரணம் சிம்பு தேவன் அவருக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தன்னோடு இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகளை கூறினார்.

இதனை அடுத்து இந்த திரைப்படங்களில் நடித்த அனைவரையும் வரவேற்ற இவர் பிரஸ் மீட்டருக்கு வந்ததில் ஏதேனும் தாமதம் ஆகி இருந்தால் மன்னிக்க வேண்டும் என்று கூறிவிட்டார்.

கடுப்பாக்கி கிளம்பிய யோகி பாபு..

இதனைத் தொடர்ந்து பல்வேறு கேள்விகளை நிருபர்கள் எழுப்ப அந்த கேள்விகளுக்கு தக்க பதிலை யோகி பாபு தந்த வண்ணம் இருந்தார்.

இதனை அடுத்து நிருபர்களின் கோபம் புரிந்ததாகவும் அதற்காகத்தான் மன்னிப்பு கேட்டேன் என்றும் கூறிய இவர் கேள்விகளை நிதானமாக கேட்கும் படி வேண்டுகோள் விடுத்தார்.

 

இதனை அடுத்து பத்திரிக்கையாளர் சந்திப்பு குறித்து ஏற்கனவே பேசும் போது யோகி பாபு வருவாரா? என்று கேட்டதற்கு 6:00 to 9:00 மணிக்குள் வருவார் என்று தான் நாங்கள் கூற விரும்பினமே ஒழிய பொய் சொல்ல விரும்பவில்லை என்று சொன்னார்கள்.

சிறிய பட்ஜெட் படம் என்றாலும் இந்த படத்திற்கு உங்களது ஆதரவு கண்டிப்பாக தேவை அவர் தாமதமாக வந்ததற்கு ஏற்கனவே மன்னிப்பு கேட்டு விட்டார்.

எனவே அதை நீங்கள் உணர்ந்து இந்த படத்துக்கு உங்களுடைய ஆதரவை கட்டாயம் கொடுக்க வேண்டும்.

மேலும் இந்த பிரஸ்மீட்டில் கலந்து கொள்வதற்கு தாமதமானது உண்மைதான். அதை பற்றி நாங்கள் நியாயப்படுத்த விரும்பவில்லை. எனவே புரிந்துகொண்டு எங்களுக்கு ஒத்துழைப்பை கொடுங்கள் என்று கேட்டார்கள்.

மேலும் படக்குழுவினர் மட்டுமே பிரஸ்மீட்டில் இருக்கலாம் என்று நினைத்த போது யோகி பாபு தான் நானும் வந்து சேர்ந்து விடுகிறேன். அவர்களிடம் ஒரு வேண்டுகோள் வையுங்கள் தாமதமானாலும் வந்து விடுகிறேன் என்று கூறினார்.

இப்படி யோகி பாபு மற்றும் நிருபர்கள் இடையே ஏற்பட்ட பேச்சில் மன்னிப்பு கேட்டது பற்றிய விவகாரம் தற்போது வெளி வந்து வைரலான விஷயமாக மாறி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருள் ஆகிவிட்டது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam