பிள்ளையை கொண்டு வந்து சத்தியம் பண்ண சொல்லுங்க.. வாய் கூசாம பொய் சொல்றார்!. யோகி பாபுவுடன் பத்திரிக்கையாளருக்கு வந்த பஞ்சாயத்து..

தற்சமயம் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரு நடிகராக மாறி இருக்கிறார் நடிகர் யோகி பாபு. யோகி பாபு தற்சமயம் தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு காமெடி நடிகராக இருந்து வருகிறார். பெரும்பாலும் பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் வாய்ப்புகள் பெற்று நடித்து வருகிறார் நடிகர் யோகி பாபு.

இந்த நிலையில் யோகிபாபுக்கும் பிரபல யூ ட்யூப் சேனலான வலைப்பேச்சுக்கும் இடையே தற்சமயம் பிரச்சனைகள் துவங்கியிருக்கின்றன. அதுதான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சத்தியம் பண்ண சொல்லுங்க

வலைப்பேச்சு யூடியூப் சேனலை பொறுத்தவரை அனைத்து நடிகர்கள் குறித்தும் அவர்கள் செய்திகளை வெளியிடுவதுண்டு. அதில் சில சமயம் எதிர்மறையான செய்திகளை அவர்கள் கூறுவது உண்டு. அப்படியாக யோகி பாபு படப்பிடிப்பில் நிறைய இயக்குனர்களுக்கு தொந்தரவு கொடுப்பதாக அந்த இயக்குனர்களே கூறியதாக அவர்கள் சில வீடியோக்களில் பேசியிருந்தனர்.

yogi babu

இது குறித்து யோகி பாபு ஒரு பேட்டியில் பேசும் பொழுது வலைப்பேச்சு சேனல் தன்னை கவனிக்கும்படி கூறியது. ஆனால் அதை நான் செய்யவில்லை அதனால் தான் அவர்கள் என்னை பற்றி அவதூறு பரப்புகிறார்கள் என்பதாக  மறைமுகமாக பேசியிருந்தார்.

வாய் கூசாம பொய் சொல்றார்

இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் வலைப்பேச்சு பிஸ்மி மற்றும் அந்தணன் இருவரும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறும் பொழுது  அப்படி நடிகர்களிடம் காசு வாங்கிக்கொண்டு சேனல் நடத்த வேண்டும் என்றால் ரஜினி விஜய் மாதிரியான பெரிய நடிகர்களை எல்லாம் விட்டுவிட்டு யோகி பாபுவிடமா நாங்கள் செல்வோம் என்று கூறி இருக்கின்றனர்.

மேலும் வலைப்பேச்சு அந்த கூறும் பொழுது நாங்கள் காசு கேட்டதாக யோகி பாபு கூறுகிறார். அப்படியென்றால் நாங்கள் பேசிய ஆடியோ அவரிடம் இருக்கிறதா சரி அதுவும் இல்லை என்றால் அவர் திருத்தணி முருகன் மீது அதிக நம்பிக்கை கொண்டவர்.

நானும் திருத்தணி முருகன் மீது நம்பிக்கை கொண்டவன்தான் இருவரும் அந்த கோயிலுக்கு செல்வோம். அங்கு சாமி முன்பு அவரை சத்தியம் செய்ய சொல்லுங்கள். அவரது குழந்தையை அழைத்து வந்து அதன் மீது சத்தியம் பண்ண சொல்லுங்கள்.

யோகி பாபுவுடன் வந்த பிரச்சனை

நாங்களும் எங்கள் குழந்தைகளை அழைத்து வந்து அதன் மீது சத்தியம் பண்ணுகிறோம். எப்படி வாய் கூசாமல் பொய் சொல்கிறார் யோகி பாபு என்று கூறியிருந்தார்.

மேலும் பாட்னர் என்ற படத்திற்காக காசு வாங்கிக்கொண்டு இவருக்காக பட குழுவை காத்திருந்த செய்தி எங்களுக்கு தெரியும். அதையெல்லாம் வெளியில் கூறக்கூடாது என்று எதையும் நாங்கள் கூறவில்லை. அதேபோல சம்பள விஷயத்திலும் யோகி பாபு நிறைய தவறுகள் செய்திருக்கிறார்.

ஒரு நாளைக்கு 25 லட்சம் சம்பளமாக வாங்கும் யோகி பாபு ஐந்து லட்சத்தை மட்டும் தான் கணக்கில் காட்டுகிறார். மீதி 20 லட்சத்தை கருப்பு பணமாக தான் வாங்குகிறார் என்று பல சர்ச்சைக்குறிய விஷயங்களை வெளியிட்டு இருக்கின்றனர் வலைப்பேச்சு சேனலை சேர்ந்தவர்கள். இதனை அடுத்து இந்த வீடியோ தற்சமயம் பிரபலமாக துவங்கி இருக்கிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam