பிரபல இசையமைப்பாளர் ஒருவர் தான் வாய் அசைத்தால் அந்த பாட்டு ஹிட்.. நான் மியூசிக் போட்டால் அந்த பாட்டு ஹிட்டோ ஹிட்டு. என தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
என்னதான் பிரபலமாக இருந்தாலும் அந்த விஷயத்தில் ஆள் படு வீக்காக இருக்கிறார் என்று கூறுகிறார்கள். மேலும், திருமணம் என்ற பேச்சை எடுத்தாலே காத தூரம் ஓடி வருகிறாராம்.
காரணம் பல்வேறு நடிகைகள் மற்றும் மாடல் அழகிகளுடன் நடிகர் மிகவும் நெருக்கமான நட்பில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய ரசிகை ஒருவருடன் இவர் இருக்க கூடிய வீடியோக்கள் வெளியானது.
ஆனால் அதன் பிறகு அவர் கிடையாது அவர் போலவே இருக்கும் வேறு ஒரு நபர் என தெரியவந்தது. இப்படி சர்ச்சைக்கு கொஞ்சம் கூட பஞ்சமே இல்லாமல் இருக்கும் இவர் தற்போது 45 வயதான ஆன்ட்டி நடிகை ஒருவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
அந்த நடிகை ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் என்பதை இங்கே கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் கடந்த ஆறு மாத காலமாக அந்த 45 வயது நடிகையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இவர் அவர் ஓகே சொல்லும் படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வருகிறாராம்.
இதுபோல் தன்னைவிட வயதில் அதிகமான நடிகைகளின் கட்டுப்பாட்டில் சென்று பணத்தை இழந்து.. புகழை இழந்து.. வாய்ப்பை இழந்து.. தற்போது வண்டி ஓட்ட கூட பணமில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் எத்தனையோ பிரபலங்களை தமிழ் சினிமா பார்த்திருக்கிறது.
இந்த உண்மை எல்லாம் இசையமைப்பாளருக்கு யாரேனும் எடுத்து கூறினால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள். மறுபக்கம் அந்த நடிகையும் தன்னுடைய பிடியை விளக்கிக் கொள்ள வேண்டும்.
என்ன காரணமோ தெரியவில்லை அந்த நாற்பத்தைந்து நடிகையின் கட்டுப்பாட்டில் ஒரு அடிமை போல இருக்கிறாராம் இசையமைப்பாளர். இந்த விவகாரம் தான் கடந்த சில வாரங்களாக கோலிவுட் வட்டாரத்தில் மிக பெரிய பேசுபொருளாக இருந்து வருகின்றது.