சினிமா வாய்ப்பு என அழைத்து சென்று இளம்பெண்ணை சீரழித்த இயக்குனர்.. அதிர்ச்யில் திரையுலகம்..!

சினிமாவில் வாய்ப்பு தேடி பலரும் பல்வேறு வகைகளில் முயற்சிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சினிமா வாய்ப்பை தேடிச் சென்ற இளம்பெண்ணை சீரழித்த இயக்குனர் பற்றிய தகவல்கள் இணையங்களில் வைரலாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

 

அது குறித்த விரிவான தகவலை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்வதோடு விழிப்புணர்வோடு இருப்பது அவசியம் என்பதை புரிந்து வேண்டும்.

சினிமா வாய்ப்பு..

சினிமா வாய்ப்பை தேடி தினம் தினம் இளம் பெண்கள் திரை உலகை நோக்கி படையெடுத்துச் செல்வது இன்றும் நேற்றும் தொடர்கதையாகவே தொடர்ந்து வருகிறது.

அந்த வகையில் சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக அழைத்துச் சென்ற இளம் பெண்ணை சீரழித்த உதவி இயக்குனர் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கும் விஷயமானது திரை உலகம் எங்கும் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விஷயம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்தேறி உள்ளது. விசாகப்பட்டினத்தை சேர்ந்த சித்தார்த்வர்மா 30 வயது உடைய நபர் சினிமா உதவி இயக்குனராக இருக்கிறார்.

மேலும் இவர் தெலுங்கானாவில் இருக்கும் ஹைதராபாத்தில் உள்ள கொண்டாப்பூர் ராகவேந்திரா காலனியில் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த 24 வயதில் இளம் பெண் ஒருவர் இவருக்கு அறிமுகம் ஆகி இருக்கிறார்.

இயக்குனரால் சீரழிந்த இளம் பெண்ணின் கதை..

இந்தப் பெண்ணை பார்த்ததுமே அவர் அழகில் மயங்கிய உதவி இயக்குனர் அந்த பெண்ணிடம் அவர் அழகை பற்றி அதிக அளவு புகழ்ந்து பேசியதோடு மட்டுமல்லாமல் சினிமாவிற்கு வந்தால் நல்ல எதிர்காலம் இருக்கும் என்று ஆசை வார்த்தைகளை ஏற்படுத்தி அந்தப் பெண்ணை நம்ப வைத்து விட்டார்.

அப்படி பேசிய இயக்குனரின் பேச்சை நம்பிய அந்த இளம் பெண் தன்னுடைய செல்போன் நம்பரை அவரிடம் கொடுத்து அடிக்கடி அலைபேசியில் அழைத்து பேசி வந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் ஒரு சமயம் சித்தார்த் வர்மா உடனடியாக தன் வீட்டுக்கு வந்தால் போட்டோ செலக்சன் எடுத்து அவற்றை காண்பித்து சினிமா வாய்ப்பை பெற்று தருவதாக அந்த இளம் பெண்ணிடம் கூற அந்தப் பெண்ணும் அதை நம்பி அவரது வீட்டுக்கு சென்றிருக்கிறார்.

அங்கு அந்த இளம் பெண் உதவி இயக்குனர் மது போதையில் இருந்ததை அடுத்து போட்டோ எடுப்பதாக கூறி அந்த இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு தன்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் சினிமா வாய்ப்புகள் உடனடியாக வந்து சேரும் என்று ஆசை வார்த்தை காட்டி விட்டார்.

அதிர்ச்யில் திரையுலகம்..

அவர் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பிய அந்த இளம் பெண் அவரது ஆசைக்கு இணங்கி விட தொடர்ந்து அந்த இளம் பெண்ணுடன் சித்தார்த் வர்மா அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதை அடுத்து சினிமா வாய்ப்பு வாங்கி தராமல் தன்னை தொடர்ந்து ஏமாற்றியதால் அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறார் இளம் பெண். இதை அடுத்து உதவி இயக்குனர் சித்தார்த் வர்மாவின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நேற்று கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

இந்நிலையில் போலீசார் விசாரணையின் போது இதுபோல பல பெண்களை ஏமாற்றியது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில் அவரது செல்போனில் உள்ள எண்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது இந்த விஷயம் திரை உலகில் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam