G.O.A.T படத்தில் பெரிய சர்ப்பிரைஸ்.. YOUNG VIJAY குசும்பு.. தியேட்டர் கிழியப்போகுது..! VP கூறிய தகவல்..!

YOUNG VIJAY  : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள G.O.A.T திரைப்படம் இன்னும் நான்கு நாட்களில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறி கிடக்கும் நிலையில் இந்த படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழா நடத்தப்பட போவதில்லை என்ற தகவல் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

நடிகர் விஜய் அரசியல் அறிவிப்பை வெளியிட்ட பிறகு வெளியாக கூடிய முதல் திரைப்படம் என்பதால் இந்த படத்தின் மீது வழக்கத்திற்கு மாறாக அதிகமாகவே எதிர்பார்ப்பு நிலவுகிறது.

படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரத்தை தாண்டி செல்கிறது படம் சரியாக மூன்று மணி நேரம் என்றும் அடுத்த மூன்று நிமிடங்கள் படபிடிப்பின் போது எடுக்கப்பட்ட சுவாரஸ்யமான சம்பவங்களை இணைத்து இருக்கிறோம் என்று இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

இந்த படத்தில் நடிகர் விஜய் பேசும் வசனங்கள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக  அமையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் மீது எந்த ஒரு பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் ஒட்டுமொத்த படக் குழுவும் கவனமாக இருந்திருக்கிறார்கள்.

ஏனென்றால் நடிகர் விஜயின் படம் என்பதை தவிர இந்த படத்தின் மீது அப்படி எடுத்திருக்கிறோம் இப்படி எடுத்திருக்கிறோம் என்ற எந்த ஒரு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாமல் படத்தின் டிரைலரையும் எந்த ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாகவும் இல்லாமல் எளிமையான முறையிலேயே வெளியிட்டு இருக்கிறது படக்குழு.

இது படத்திற்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. மேலும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் வெங்கட் பிரபு இந்த படத்தில் வரக்கூடிய இளம் விஜய் கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவரும்..

 

அப்படி ஒரு கேரக்டரில் நடிகர் விஜயை இதுவரை யாரும் பார்த்திருக்க மாட்டீர்கள். அந்த காட்சிகளை நான் ஒரு இயக்குனராக எத்தனை முறை பார்த்திருப்பேன். எனக்கே அந்த காட்சிகளை பார்க்க பார்க்க புதிதாக பார்ப்பது போலவே இருக்கிறது என்றால் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்த அளவுக்கு அவருடைய கதாபாத்திரத்தை செய்து இருக்கிறார். அதிலும் அவர் செய்யக்கூடிய குசும்புகளுக்கு தியேட்டர் கிழியப்போகிறது என்பதை என்னால் தைரியமாக கூற முடியும் என பேசி இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version