இறந்த பின்பும் ரகசியமாய் லட்சக்கணக்கில் விட்டுச்சென்ற அம்மா..! அழுகைய அடக்க முடியல..! ஆர்.ஜே.ஷா சொன்னதை கேளுங்க..!

சமீபத்தில் யூ ட்யூப்பர்கள் சினிமா நடிகர்களை விடவுமே மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமாகி வருகின்றனர். சொல்லப்போனால் அவர்களுக்கென்று தனி மார்க்கெட்டும் இருந்து வருகிறது.

இதனாலேயே சினிமாவிலும் யூட்யூபில் பிரபலமானவர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த இரண்டு வருடங்களில் யூடியூபில் அதிகமாக பிரபலமானவர் நாகராஜ். நாகராஜ் மற்றும் அவரது மனைவி சங்கீதாவுடன் அவர் இணைந்து போடும் வீடியோக்கள் அதிக பிரபலமானவை.

கிட்டத்தட்ட 70 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களை கொண்ட பெரிய யூடுயூபராக இவர் இருந்து வருகிறார். தினசரி வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை நகைச்சுவையாக வீடியோக்களாக செய்து பதிவிடுவதை வேலையாக கொண்டிருந்தார் நாகராஜ்.

நாகராஜின் தாயார்:

நாகராஜின் அம்மா சமீபத்தில் உயிரிழந்ததை அடுத்து அது குறித்துதான் நிறைய பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இது குறித்து ஆர்.ஜே ஷா ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார். அதில் அவர் கூறும்பொழுது நாகராஜ் மற்றும் அவரது அம்மா குறித்து நிறைய விஷயங்களை பேசி இருந்தார்.

நாகராஜின் தாயார் சிறுவயது முதலே நாகராஜுக்கு நிறைய சப்போர்ட்டாக இருந்திருக்கிறார். விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டிருந்த நாகராஜ் அதில் பெரிய ஆளாக வரவேண்டும் என்றுதான் முதலில் ஆசைப்பட்டு இருக்கிறார்.

ஆனால் அதில் பெரிய ஆளாக வரமுடியாத சூழ்நிலையில் சொந்தமாக தொழில் தொடங்க முடிவெடுத்து இருக்கிறார். இதற்காக அவரது தாயார் அவர் வைத்திருந்த நகையெல்லாம் விற்று ஆறு லட்ச ரூபாய் தயார் செய்து கொடுத்திருக்கிறார்.

அதை வைத்து ஒரு குல்பி கம்பெனியை ஆரம்பித்திருக்கிறார் நாகராஜ் ஆனால் கொரோனா வந்த காரணத்தினால் அந்த கம்பெனியும் நஷ்டத்தில் சென்று கடைசியில் மூடப்படும் நிலைக்கு சென்றது. அதன் பிறகும் கூட அவரது அம்மா அவரை திட்டவே இல்லையாம்.

யூ ட்யூப்பில் பிரபலம்:

பிறகு யூ ட்யூப்பில் சும்மா வீடியோ செய்து போட்டால் நிறைய வியூஸ் வருகிறது என்று கேள்விப்பட்டு வீடியோக்களை செய்து போட தொடங்கி இருக்கிறார் நாகராஜ். அதுவே அவருக்கு அதிக வருமானத்தையும் பெற்று கொடுத்திருக்கிறது.

அதன்பிறகு அவர் அம்மாவை கோவாவிற்கு அழைத்துச் சென்று இருக்கிறார் நாகராஜ். இந்த நிலையில் அவரது தாயார் இறப்பதற்கும் ஒரு வாரத்திற்கு முன்பே அது தெரிந்து சில விஷயங்களை செய்ததாக கூறியிருக்கிறார் நாகராஜ்.

அதாவது இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தனது சொந்தக்காரர்கள் உடன் பிறந்தவர்கள் அனைவரையும் சென்று பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார் நாகராஜின் தாயார். சரி என்று இவரும் அழைத்து சென்று இருக்கிறார்.

அதேபோல இறப்பதற்கு முதல் நாள் கறி, மீன் என்று அனைத்து அசைவத்தையும் வாங்கி வர சொல்லி இருக்கிறார். எதற்கு உடம்பு முடியாத நேரத்தில் இவ்வளவையும் சமைக்க போகிறீர்கள் என்று நாகராஜ் கேட்ட பொழுதும் ஆசையாக செய்து தர வேண்டும் என்று கூறி இருக்கிறார் அம்மா.

 

சரி என்று நாகராஜும் வாங்கி வந்து கொடுத்திருக்கிறார். அன்று உடம்பு முடியாத போதும் கூட அவற்றையெல்லாம் சமைத்து தனது மகனுக்கு கொடுத்திருக்கிறார் நாகராஜின் தாயார்.

அதற்குப் பிறகு மறுநாள் அவர் உயிரிழந்து இருக்கிறார். இதனை கண்ணீருடன் பிறகு ஒரு வீடியோவாக நாகராஜ் பதிவு செய்து இருக்கிறார் எனது தாயாருக்காக அவர் உடல்நிலை சரியில்லாத பொழுது ஆறு லட்ச ரூபாய் செலவு செய்தேன். அதிலும் நான்கு லட்ச ரூபாயை எனக்கு திரும்ப கொடுத்துவிட்டார் எனது தாயார் என்று கண்ணீர் மல்க நாகராஜ் பேசியிருந்ததை அந்த வீடியோவில் பகிர்ந்திருக்கிறார் ஆர் ஜே ஷா

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version