மியூசிக் டைரக்டர் யுவன் ஷங்கர் ராஜாவின் முன்னாள் மனைவிகள் 2 பேரையும் பாத்திருக்கீங்களா..? இதோ போட்டோ..

தமிழ் திரை உலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய அற்புத இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் இவர் இசைஞானி இளையராஜாவின் இளைய மகன் ஆவார்.

இதையும் படிங்க: படையப்பா “சிங்க நடை போட்டு..” பாடலில் தோன்றிய இந்த குழந்தை யாரு..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!

ஒரு காலகட்டத்தில் இளையராஜா, கானா தேவா, இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் என இசையில் இவர்களை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என்று மிகப்பெரிய ஆளுமைகளாக உலா வந்த சமயத்தில் யாரும் எதிர்பார்க்கிறாத வகையில் தன்னுடைய அசாத்திய இசை திறமையால் 90-களில் தனக்கு என்று ஒரு தனி சாம்ராஜ்யத்தை அமைத்தவர் யுவன்.

இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா..

இவர் அமைக்கின்ற மெலோடி பாடல்களை கேட்பதற்கு என்று ஒரு ரசிகர் படை இருக்கும். மெலோடி பாடல்கள் மட்டுமல்லாமல் குத்துப் பாடல்களுக்கும் சூப்பரான இசையை போட்டு அனைவரையும் ஆட வைக்க கூடிய அற்புத இசை அமைப்பாளர்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ரோடு நா முத்துக்குமார் இணைந்து பாடல் எழுதி இருந்தால் அந்த ஹிட் சூப்பர் டூப்பர் ஹிட்டாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஒரு ஃபேவரைட் காம்போவாக ரசிகர்களுக்கு அமைந்துவிடும்.

இசையில் ஒரு சாம்ராஜ்யத்தை கட்டிய யுவன் சங்கர் ராஜாவின் குடும்ப வாழ்க்கை பற்றி பலருக்கும் தெரியாது. அவரைப் பற்றிய சில விஷயங்களை இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

மொத்தம் மூன்று திருமணம்..

யுவன் சங்கர் ராஜா 2015 ஆம் ஆண்டு முஸ்லிம் பெண்ணான ஜஃப்ரூம் நிஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் இவரது மூன்றாவது திருமணம் ஆகும். அப்படி என்றால் இவர்களின் முதல் இரண்டு மனைவிகள் யார் என்ற எண்ணம் உங்களுக்குள் ஓடும் அது பற்றி இனி பார்க்கலாம்.

எக்ஸ் மனைவிகள் போட்டோஸ்..

இவர் எக்ஸ் மனைவிகள் யார் என்ற கேள்விக்கான விடை கடந்த 2005 ஆம் ஆண்டு சுஜாயா சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடுத்து 2007 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

இதனை அடுத்து இவர் 2011 ஆம் ஆண்டு மீண்டும் ஷில்பா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் வாழ்க்கையும் மூன்றே ஆண்டுகளில் முற்று பெற்று 2014 ஆம் ஆண்டு ஷில்பாவை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

அடுத்து இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறி இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்து கொண்ட இவர் தனது பெயரை அப்துல் காலிக்கு என்று மாற்றிக்கொண்டார். தற்போது இவருக்கு சியா என்ற பெண் குழந்தை உள்ளது.

இதையும் படிங்க: திடீர் காதல் திருமணம்.. பல வருடம் தனிமை.. கருப்பை பிரச்சனை.. Anitha மகள் Vijayakumar பேத்தி Diya

இவரது எக்ஸ் மனைவிகளின் புகைப்படங்கள் அண்மையில் இணையங்களில் வெளி வந்து ரசிகர்களுக்கு ஷாக் அளித்துள்ளது. மீண்டும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு இவனின் இரண்டு மனைவிகள் பற்றிய பேச்சே பேசும் பொருளாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version