இசைஞானி இளையராஜாவின் இளைய மகனான யுவன் சங்கர் ராஜா இதுவரை விஜய், அஜித், சூர்யா, சிம்பு போன்ற முன்னணி நாயகர்களின் படங்களுக்கு சிறந்த முறையில் இசையமைத்திருக்கிறார்.
இவரது இசையில் வெளிவந்த பாடல்கள் ஒவ்வொன்றும் இளைஞர்களின் இதயத்தை தொடும் அளவுக்கு இருப்பதால் பட்டி தொட்டியில் இருக்கும் இளைஞர்கள் அனைத்தும் இவரது பாடலை விரும்பி கேட்பார்கள்.
அந்த வகையில் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெய்லர் திரைப்படத்தை நெல்சன் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு ,சிவராஜ்குமார் போன்றவர்கள் நடித்து வருகிறார்கள்.
இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.மேலும் படத்திற்கான இசையை அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான ஷூட்டிங் மிக பரபரப்பாக நடந்து வருகிறது.
இந்தப் படத்தை தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிக்கின்ற இரண்டு படங்களில் ரஜினி நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
அந்தப் படத்தில் ஒன்றுதான் லால் சலாம் இந்த திரைப்படத்தை அவரது மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் துவங்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது.
மேலும் மற்றொரு படமான ரஜினி படத்தை டான் பட இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் கூறிய கதையம்சம் இவருக்கு பிடிக்காததால் ரஜினிகாந்த் அவரது படத்திற்கு பை பை சொல்லிவிட்டார்.
இதை எடுத்து அந்த பட வாய்ப்பு லவ் டுடே படத்தை இயக்கிய நடித்த பிரதீப் ரங்க நாதனுக்கு வழங்கப்பட்டுள்ளது .எனவே கிட்டத்தட்ட பிரதீப் ரங்க நாதனுக்கு தான் 171 வது ரஜினிகாந்தின் படத்தை இயக்கக்கூடிய வாய்ப்பு உருவாக்கி விட்ட நிலையில் படத்தின் கதையைப் பற்றி பகிர அவர் லண்டன் சென்று இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் எந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்ப உள்ளதாக தகவல்கள் தீவிரமாக பரவி வருகிறது.
லவ் டுடே படத்துக்கு யுவன் சங்கர் ராஜா தான் இசை அமைத்திருந்தார்.இதில் பாடல்களும் பயங்கர ஹிட்டானவின் காரணமாக 171 வது படத்தில் இந்த கூட்டணி தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிக அளவு உள்ளது.
எனவே யுவன் சங்கர் ராஜாவுக்கு தலைவர் ரஜினி படத்தில் இசையமைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள். குறித்த விபரம் விரைவில் உறுதியாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியில் வெளிவரலாம்.