இசைஞானி இளையராஜா அவர்களின் மகளும் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரிணி உடல்நல குறைவு காரணமாக மரணம் அடைந்திருக்கிறார்.
இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. பிரபல இசையமைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா அவர்களின் மகள் பவதாரணி இவர் சினிமாவில் பின்னணி பாடுகியாக இருந்து வந்திருக்கிறார்.
இவர்கள் பாடிய அனைத்து பாடல்களுமே வெற்றி பாடல்களாக அமைந்தன. கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் புற்றுநோய் காரணமாக அவதியுற்று வந்த இவர் இதற்கான தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு இருக்கிறார்.
பவதாரிணி மரணம் எப்படி..?
மேல் சிகிச்சைக்காக இலங்கைக்கு சென்றிருந்தார். அங்கு உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி காலமாகி இருக்கிறார். இவரது உடலை சென்னை கொண்டுவரும் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பவதாரணி பாரதி திரைப்படத்தில் மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலை பாடியதன் மூலம் தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னணி பாடகியாக மட்டுமில்லாமல் பத்திற்க்கும் மேற்ப்படுத்த திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டு வந்த தற்போது இலங்கையில் மரணம் அடைந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.