எப்போதுமே சீரியல் நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு என்பது அதிகமாகதான் இருந்து வருகிறது. ஏனெனில் சீரியல்கள் என்பது திரைப்படங்களை விடவும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட ஒரு விஷயமாகும்.
சீரியல் என்பது சின்னத்திரையில் துவங்கிய கால கட்டம் முதலே சினிமா பிரபலங்கள் அளவிற்கு சீரியல் பிரபலங்களும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற துவங்கினர். அந்த வகையில் தமிழில் பொறுத்த வரைக்கும் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகிய மூன்று சேனல்கள்தான் சீரியல்களுக்காக போட்டி போட்டு வரும் சேனல்களாக இருக்கின்றன.
தொடர்ந்து டி.ஆர்.பி ரேட்டிங்கில் தங்களுடைய சீரியல் எல்லாம் முன்னணி இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அதிகமாக போராடி வருகின்றனர். இந்த போராட்டமானது சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு அனுகூலமாக அமைந்து வருகிறது.
நடிகை ராஜேஸ்வரிக்கு ஈடுபாடு:
இப்படியாக ஜீ தமிழ் சேனலில் மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு சீரியல் நடிகையாக இருப்பவர்தான் நடிகை ராஜேஸ்வரி. ஜீ தமிழில் ஒளிபரப்பான கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலில் அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார் ராஜேஸ்வரி.
வெகு காலங்களாகவே அவருக்கு சின்னத்திரையின் மீது ஆர்வம் இருந்த காரணத்தினால் தொடர்ந்து சின்னத்திரையில் நடிப்பதற்கு முயற்சிகளை செய்து வந்தார். இந்த நிலையில்தான் அவருக்கு ஜீ தமிழ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் ராஜேஸ்வரி என்கிற அவரது பெயரானது மிகவும் பொதுவான ஒரு பெயராக இருப்பதால் இவளது பெயரே ஜீ தமிழ் ராஜேஸ்வரி என்று மாறி இருக்கிறது. அந்த அளவிற்கு ஜீ தமிழ் சீரியலில் ஒரு முக்கியமான அங்கமாக மாறி இருக்கிறார் ராஜேஸ்வரி.
இளமை தோற்றம்:
சின்னத்திரையை பொருத்தவரை அதில் நடிக்கும் பெரும்பாலான நடிகைகள் அவர்களுக்கு வயதுக்கு ஏற்ற தோற்றத்தில் நடிப்பது கிடையாது. அந்த நாடகத்திற்கு அவர்கள் என்ன கதாபாத்திரமாக நடிக்க வேண்டுமோ அதுவாகதான் நடிப்பார்கள்.
அதனால் பல வயதான கதாபாத்திரங்களாக இருக்கும் பலர் நிஜத்தில் பார்க்கும் பொழுது நம்மை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் இளமையாக இருப்பார்கள்.
அந்த வகையில் கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதால் தொடர்ந்து ஒரு வயதான கதாபாத்திரமாக தோற்றம் கொடுத்தாலும் உண்மையில் ராஜேஸ்வரி இளமையான ஒரு தோற்றத்தை கொண்டவராவார்.
இந்த நிலையில் அவருடைய இளமை புகைப்படங்கள் சமீபத்தில் வெளியான நிலையில் அது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்திருக்கிறது இவ்வளவு இளமையானவரையா அம்மா சதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்கள் என்று பேசி வருகின்றனர்.