எல்லாமே அரசியல்.. மேடையில் ஒன்னும் தெரியாதது போல அழுத KPY பாலா..! விளாசும் ரசிகர்கள்..!

பாலன் ஆகாஷ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவரை வெட்டுக்கிளி பாலா என்றும் அழைப்பார்கள். அது மட்டுமல்லாமல் கே பி ஒய் பாலா என்று அழைக்கப்படக்கூடிய இவர் ஒரு மிகச்சிறந்த நகைச்சுவை நடிகராக இருப்பதோடு மட்டுமல்லாமல் கோமாளியுடன் ஸ்டார் விஜய்யின் குக் நிகழ்ச்சியில் தோன்றியவர்.

1995-ஆம் ஆண்டு காரைக்காலில் பிறந்த இவர் விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில் வாய்ப்பை தேட ஆரம்பித்த பிறகு 2017 கலகப் போவது யாரு சீசன் 6 போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

KPY பாலா..

சின்னத்திரையில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் கோகுல் இயக்கிய விஜய் சேதுபதியின் ஜூங்கா படத்தில் நடித்து அறிமுகம் ஆனார்.

சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய இவருக்கு அதிகளவு ரசிகர்கள் இருப்பதால் இவரது இணைய பக்கங்களை அதிகளவு ஃபாலோ செய்து வருகிறார்கள்.

சமூக ஆர்வலராக திகழக்கூடிய இவர் 2023 ஆம் ஆண்டு ஈரோடு அருகே இருக்கும் கடம்பூர் மலை வாழ் மக்களுக்காக ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கி இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் பாலா தொகுத்து வழங்கும் ருத்ரன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது லாரன்ஸ் பாலாவிற்கு 10 லட்சம் நிதி உதவி அளித்தார்.

இப்படி பலதரப்பட்ட மக்களுக்கும் பாகுபாடு இல்லாமல் உதவிகளை அள்ளி வழங்கும் கலியுக கர்ணனாக விளங்கும் இவரை பற்றி இணையங்களில் பல்வேறு விமர்சனங்கள் வெளிவந்து உள்ளது.

எல்லாமே அரசியல்..

அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் இருந்து இது போல புகழ்பெற்றவர்கள் திரை உலகில் மிகச்சிறந்த இடத்தை பிடித்து பிரபலங்கள் ஆகி வந்திருப்பது உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.

அதற்கு உதாரணமாக நாம் சிவகார்த்திகேயனை கூட கூறலாம். அந்த வரிசையில் கே.பி.ஒய் பாலாவை மாற்ற துடிக்கும் விஜய் டிவியை சார்ந்த பலரும் கமுக்கமாக இது நிமித்தமாக ஈடுபட்டு காய்களை நகர்த்தி வருகிறார்கள்.

அந்த வகையில் இதெல்லாம் அரசியல் என்று சொல்லக்கூடிய வகையில் இந்நிகழ்வானது நடைபெற்று வருகிறது என்றால் உங்களுக்கு அது ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

மேடையில் தெரியாதது போல் அழுத பாலா..

அந்த வகையில் பாலா இது பற்றி எதுவுமே தெரியாதது போல அழுத நிலையில் மேடையில் லாரன்ஸ் உடன் நின்றிருக்கும் புகைப்படமானது தற்போது வைரலாக பரவி வருகிறது.

இதற்குக் காரணம் கேபிஒய் பாலா ரெண்டு வருஷமா கதை கேட்டு இருக்காரு. பாலாவை ஹீரோவாக அதுக்கு விஜய் டிவில நிறைய பேர் பின்னாடி இருந்து வேலை செஞ்சுட்டு இருக்காங்க என ராகவா லாரன்ஸ் மேடையில் நான் படம் தயாரிக்கிறேன் என சொன்னதும் ஏதோ தெரியாத மாதிரி மேடையில பாலா அழுகிறார் என்று பத்திரிக்கையாளர் சுபைர் கூறிய கருத்தானது தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது.

 

இவனை அடுத்து இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் பாலாவின் நிலை என்ன என்பதை பற்றி அறிந்து கொள்ள ஆவலாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விட்டார்கள்.

மேலும் இந்த விஷயத்தை பற்றி இணையத்தில் பட்டிமன்றங்கள் கூட நடந்து வருவதால் பத்திரிக்கையாளர் சுபைர் கூறிய விஷயத்தில் உண்மை உள்ளது என்று ஆமோதித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version