கல்யாணம் ஆனதுல இருந்து நாங்க ஒன்னா இருந்ததே.. இவ்ளோ நாள் தான்.. வெளிப்படையாக பேசிய அர்ச்சனா..!

தற்போது திரைப்படங்களில் நடிக்கின்ற நடிகைகளுக்கு இருக்கின்ற செல்வாக்கு ஏற்ப தொகுப்பாளினிகளாக செயல்படும் வி.ஜேக்களுக்கும் சின்னத்திரையில் மிகப் பெரிய அளவு வரவேற்பும் மக்கள் மத்தியில் மௌசும் உள்ளது.

இவர் தனது 2022-ஆம் ஆண்டு திரை பயணத்தை துவங்குவதை அடுத்து சின்னத்திரை நிகழ்ச்சிகள் மட்டும் அல்லாமல் ரியாலிட்டி ஷோகளின் கலந்து கொண்டு அவற்றை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர்.

கல்யாணம் ஆனதுல இருந்து நாங்க ஒன்னா இருந்ததே..

வட இந்திய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் கல்லூரியில் படிக்கும் காலம் கொண்டே சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி டைம் நிகழ்ச்சியில் நடிகர் சிட்டிபாபு உடன் இணைந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

மேலும் இவர் இளமை புதுமை, கலக்கப்போவது யாரு என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்த சமயத்தில் திருமணத்தை முடித்துக் கொண்டு ஒரு சிறு இடைவெளியை சின்னத்திரையில் எடுத்துக் கொண்டார்.

21 வயதில் திருமணம் செய்து கொண்ட இவர் தன் குடும்பத்தை பற்றி சொல்லும் போது அவருடைய அப்பா இல்லாததால் குடும்ப பொறுப்பு அதிகமாக இருந்தது என்றும் தன் தங்கைக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறியதோடு 21 வயதில் பெண்களுக்கு இருக்கின்ற அத்தனை கனவுகளும் தனக்கும் இருந்தது என்று சொல்லி இருக்கிறார்.

மேலும் ஒவ்வொரு பெண்ணும் நினைப்பது போல் தன் கணவனுடனே இருக்க வேண்டும் அவர் எங்கெங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் அவரோடு செல்ல வேண்டும் என்ற ஆசை இவருக்கு அதிகளவு இருந்ததாக சொல்லி இருக்கிறார்.

அந்த வகையில் இவருக்கும் இவருடைய கணவருக்கும் திருமணமாகி ஏறக்குறைய 18 ஆண்டுகள் உருண்டோடி விட்ட சூழ்நிலையில் மொத்தமாகவே இந்த 18 ஆண்டுகளில் வெறும் மூன்று ஆண்டுகள் மட்டும் தான் ஒன்றாக இருந்திருப்போம் என்ற திடுக்கிடும் உண்மையை கூறியிருக்கிறார்


இவ்ளோ நாள் தான்.. வெளிப்படையாக பேசிய அர்ச்சனா..

அதாவது இருவரும் ஒன்றாக சேர்ந்து மூன்று ஆண்டுகள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்ததாக கூறி இருக்கும் இவர் தற்போது அவருக்கு சென்னையில் வேலை இருப்பதால் அவருடன் நேரத்தை செலவு செய்ய முடிகிறது என்ற உண்மையை கூறினார்.

அது மட்டுமல்லாமல் வேலை நிமித்தமாக வடநாடுகளில் அதிக அளவு வேலை பார்த்த அவரை விட்டு பிரிந்து தான் அதிக நாட்கள் வாழ்ந்ததாக கூறி இருக்கும் விஜே அர்ச்சனா கல்யாணம் ஆனதிலிருந்து நாங்கள் ஒன்றாக இருந்ததே மூன்றில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் தான் இருக்கும் என்று வெளிப்படையாக பேசிய பேச்சானது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருள் ஆகியுள்ளது.

இதைத்தொடர்ந்து இந்த விஷயத்தை பட்டிமன்றம் போட்டு பேசி வரும் ரசிகர்கள் அனைவரும் இது குறித்த விஷயம் தெரியாத நண்பர்களுக்கு இந்த விஷயத்தை ஷேர் செய்து வருகிறார்கள்.

அத்தோடு மீண்டும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தொகுப்பாளினியாக செயல்பட்டு வரக்கூடிய இவர் மேலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam