சர்ச்சையை அடுத்து குக் வித் கோமாளிக்கு மூடு விழா.. ரசிகர்களை கவர ஜாக்குலின்.. புது குக்கிங் ஷோ..

குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் நடந்து முடிந்து விட்டது. இதனை அடுத்து சீசன் 5 ஏற்பட்ட சர்ச்சைகள் உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

மணிமேகலை மற்றும் பிரியங்கா மத்தியில் தன்மானமா? வருமானமா? என்ற ரீதியில் ஒரு மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்ட நிலையில் விஜய் டிவியின் பெயர் சற்று டேமேஜ் ஆனதோடு பிரியங்காவிற்கு இவ்வளவு சப்போர்ட் செய்ய வேண்டுமா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு இது குறித்து எதுவுமே விஜய் டிவி பேசவில்லை என்ற விஷயங்கள் மக்கள் மத்தியில் பேசும் பொருளானது.

சர்ச்சையை அடுத்து குக் வித் கோமாளிக்கு மூடு விழா..

ரியாலிட்டி ஷோ என்றாலே விஜய் டிவி மற்ற தொலைக்காட்சிகளை விட முன்னிலையில் இருக்கும். அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி 5 சீசங்களாக வெளிவந்து தற்போது முடிந்துள்ளது.

இதில் முதல் சீசனை வனிதா விஜயகுமாரும், இரண்டாவது சீசனை கனியும், மூன்றாவது சீசனில் சுருதிக்காகவும், நான்காவது சீசனை மைம் கோபியும் டைட்டில் வின்னராக ஆனதை அடுத்து இந்த சீசனில் பிரியங்கா வெற்றி வாகை சூடினார்.

இந்நிலையில் குக் வித் கோமாளி ஐந்தாவது சீசனில் பிரியங்கா, வி டி வி கணேஷ், ஷாவின் சோயா, சுஜிதா, இர்பான், பூஜா ஆகியோர் பங்கேற்று இருக்கிறார்கள். இது டைட்டில் வின்னர் ஆக இடம் பிடித்த பிரியங்காவிற்கு ரூபாய் 5 லட்சம் பரிசுத்தொகை கிடைத்தது.

ரசிகர்களை கவர ஜாக்குலின்.. புது குக்கிங் ஷோ..

இந்நிலையில் இந்த சீசன் முடிந்து விட்ட நிலையில் மற்றொரு புது குக்கிங் ஷோவை அறிமுகம் செய்ய விஜய் டிவி ஆவலாக உள்ளது மேலும் இந்த சர்ச்சைகளில் இருந்து வெளிவந்து டிஆர்பி ரேட்டை மீண்டும் தக்க வைக்க இந்த இந்த நிகழ்ச்சியை துவங்க இருக்கிறார்கள்.

மேலும் இந்த நிகழ்ச்சியை ரக்சன் தொகுத்து வழங்கியுள்ள நிலையில் மணிமேகலைக்கு பதிலாக ஜாக்குலினை தொகுப்பாளியாக களம் இறக்கலாம் என்ற செய்திகள் வேகமாக பரவி வருகிறது.

மேலும் நடுவர்களாக மாதம்பட்டி ரங்கராஜ், செஃப் தாமு ஆகியோர் பங்கேற்க உள்ளார்கள். எனவே மணிமேகலைக்கு பதிலாக ஜாக்குலின் இந்த நிகழ்ச்சியை ரக்சனோடு இணைந்து தொகுத்து வழங்க இருக்கிறார். ஏற்கனவே ஜாக்குலின் ரக்சன் உடன் இணைந்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்.

இதனை அடுத்து மீண்டும் இந்த நிகழ்ச்சியில் இணைந்து தொகுத்து வழங்க இருப்பதால் ரசிகர்கள் இவர்கள் இருவரது திறமையை மீண்டும் பார்க்க ஆவலாக காத்திருக்கிறார்கள்.

மேலும் இந்த போட்டியானது குக் வித் விஜய் ஸ்டார் என்ற பெயரில் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது என்ற விஷயம் ரசிகர்களின் மத்தியில் வேகமாக பரவி வருவதோடு நிகழ்ச்சியை காணக்கூடிய ஆவலும் அதிகரித்து உள்ளது என்று சொல்லலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version