சண்டையை வேடிக்கை தான் பாக்கணும்.. மாகாபாவின் பதிலை கேட்டு விளாசும் நெட்டிசன்கள்!..

ஊரு இரண்டாகினால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொல்லுவார்கள். அந்த வகையில் தான் தற்போது மணிமேகலை கிளப்பிவிட்டிருக்கும் பிரச்சனையால் இணையமே தீப்பிடித்து எரிகிறது என்று சொல்லலாம்.

இந்நிலையில் மணிமேகலை இனிமேல் குக் வித் கோமாளியில் பணியாற்ற போவதில்லை. தனக்கு தன்மானம் மட்டும் தான் பெரிது காசுக்காக அதை நான் விற்க முடியாது என்று பல குற்றச்சாட்டுகளை பிரியங்காவின் மீது சுமத்திய நிலையில் அதில் இருந்து வெளியேறியது பெரும் அதிர்ச்சியை ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தியது.

சண்டையை வேடிக்கை தான் பாக்கணும்..

இந்நிலையில் மணிமேகலைக்கு ஆதரவாக பலரும் பிரியங்காவுக்கு ஆதரவாக சிலரும் அவர்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்ற வேளையில் புரொடக்சன் ஹவுஸும் பிரியங்காவுக்கு தான் சப்போர்ட் செய்கிறது.

பிரியங்கா சொல்வதைக் கேட்டு நடப்பதன் மூலம் பல வாய்ப்புகள் கிடைக்கும் அப்படி நெகிழ்ந்து கொடுக்காமல் சென்றவர்களின் நிலை எப்படி உள்ளது என்ற ரீதியில் பல்வேறு கருத்துக்கள் வெளி வந்தது.

இதனை அடுத்து பிரியங்காவால் தனது விஜே வாழ்க்கையை தொலைத்த சில விஜேக்களின் பெயர்களும் இணையங்களில் வெளி வந்து கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு பிரியங்காவின் ரியல் ஃபேஸ் டேமேஜ் ஆகி போனது.

 

அதுமட்டுமல்லாமல் பிரியங்காவோடு இணைந்து பணிபுரிந்த மாகாபாவிடம் இந்த பிரச்சனை குறித்து கேட்கப்பட்டதற்கு இரண்டு யானைகள் மோதிக்கொள்ளும் போது நாம் என்ன செய்ய வேண்டும்.

கம்முனு அந்த சண்டைய பாத்துட்டு தான் இருக்கணும் அதை விட்டுவிட்டு போய் அத தடுக்க பார்த்தோம் அப்படின்னா யானகிட்ட மனுஷனுக்கு என்ன நிலைமை ஏற்படும். அது போல தான் இருக்கும் என்று பட்டும் படாமல் பதில் சொல்லி இருந்தார்.

இவரது எந்த பேச்சு தான் தற்போது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த விஷயத்தைப் பற்றி தனது உண்மையான கருத்தை பதிவு செய்யாமல் மாகாபா எஸ்கேப் ஆகிவிட்டார் என சொல்லிவிட்டார்கள்.

மாகாபாவின் பதிலை கேட்டு விளாசும் நெட்டிசன்கள்..

அதுமட்டுமல்லாமல் எந்த சண்டையாக இருந்தாலும் அதை வேடிக்கை தான் பார்க்க வேண்டும் என்று விளையாட்டாக பதில் அளித்திருக்கும் மாகாபா பிரியங்காவிற்கு மிகச் சிறந்த நண்பராக விளங்குகிறார்.

மேலும் இந்த விஷயத்தில் பிரியங்காவிற்கு ஆதரவாக பேசினால் பிரச்சனை சூடு பிடிக்கும் என்பதை உணர்ந்து தான் இரண்டு யானைகள் சண்டை போட்டா ஓடிப் போகணும் அதை விடுத்து வேடிக்கை பார்த்து நகரலாம். இல்லையென்றால் நசுங்கிவிடும் என்ற ரீதியில் அவர் சொன்ன கருத்துக்கள் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையை குறைத்து விட்டது.

இதை அடுத்து சில ரசிகர்கள் இந்த காலத்துல பொழைக்க தெரிஞ்ச பிள்ளையா மாகாபா இருக்காரு என்று சொல்லி இருப்பதோடு மட்டுமல்லாமல் நல்லா அடிச்சு கட்டும் வேடிக்கை பார்ப்போம் என்று அதிரடி பதிலை தந்ததாக நினைத்து மாகாபா பேசிய பேச்சுக்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி விட்டது.

இந்த விஷயத்தை ரசிகர்கள் அனைவரும் அவர்கள் நண்பர்களோடு பகிர்ந்து வருவதோடு மட்டுமல்லாமல் இணையத்தில் வைரலாக தெறிக்க விட்டிருக்கிறார்கள். மாகாபாவின் இந்த பதிலைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமெண்ட் செக்ஷனில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அதுமட்டுமல்லாமல் மாகாபாவின் இந்த பதிலை கேட்ட நெட்டிசன்கள் அவரை விளாசி தள்ளி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version