அந்த வார்த்தை சொல்லி பேசுன பிரியங்கா.. முதல் முறையா மணிமேகலை பிரச்சனை குறித்து பேசிய மாதம்பட்டி ரங்கராஜ்..!

மணிமேகலை ஒரு வீடியோவை வெளியிட்டது முதலே தற்சமயம் அதிகமாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் விஷயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி மாறியுள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பொருத்தவரை ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ஒரு நிகழ்ச்சியாக இது இருந்து வருகிறது.

பல்வேறு தடைகளை ஒவ்வொருமுறை சந்தித்த பொழுதும் கூட குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவற்றையெல்லாம் தாண்டிதான் ஒரு நல்ல இடத்தை மக்கள் மத்தியில் பிடித்திருக்கிறது. இப்படி மக்கள் மத்தியில் வரவேற்பு பெறுவதற்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கோமாளிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது.

அந்த வார்த்தை சொல்லி பேசுன பிரியங்கா

ஆரம்பத்தில் குக் வித் கோமாளியில் கோமாளியாக இருந்த பாலா, புகழ், சிவாங்கி, மணிமேகலை போன்ற ஒரு சில கோமாளிகள் தொடர்ந்து அதில் பங்கேற்று வந்ததன் மூலம்தான் இந்த நிகழ்ச்சி பிரபலம் அடைந்தது.

குக் வித் கோமாளியின் முதல் சீசன் வெளியான பொழுது அவ்வளவாக அதற்கு வரவேற்பு இருக்கவில்லை. இரண்டாவது சீசனில் இருந்துதான் அதில் வரவேற்புகள் அதிகரிக்க துவங்கியது. கடந்த நான்கு சீசன்களாக குக் வித் கோமாளியில் கோமாளியாக பங்கேற்று வந்த மணிமேகலை இந்த வருடம்தான் அதில் தொகுப்பாளராக பணிபுரிய துவங்கினார்.

மணிமேகலை பிரச்சனை

இந்த நிலையில் இதே குக் வித் கோமாளியில் குக்காக இருந்தார் வி.ஜே பிரியங்கா. வி.ஜே பிரியங்காவை பொருத்தவரை அவர் நிறைய நிகழ்ச்சிகளை விஜய் டிவியில் தொகுத்து வழங்கி வருகிறார். இதனால் இவர் தொடர்ந்து மணிமேகலைக்கு தொல்லை கொடுத்ததை அடுத்து மணிமேகலை தற்சமயம் குக் வித் கோமாளிகளிலிருந்து விலகி இருக்கிறார்.

மேலும் அதற்கு பிரியங்காதான் காரணம் என்பதை அவர் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் மணிமேகலைக்கு ஆதரவாக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். தற்சமயம் இது குறித்து மாதம்பட்டி ரங்கராஜன் பேசியிருக்கிறார்.

மாதம்பட்டி ரங்கராஜ்

அவர் கூறும் பொழுது ஆரம்பத்தில் இருந்தே பிரியங்காவின் சில விஷயங்கள் சரியில்லை என்று எனக்கு தோன்றியது. எப்பொழுதுமே பிரியங்கா தோற்று விட்டார் என்றால் உடனே அதற்காக மிகவும் மனமுடைந்து விடுவார், தோல்வியை ஏற்றுக்கொள்ளாத ஒரு நபராக அவர் இருந்தார்.

அதே சமயம் மணிமேகலை காமெடி செய்ய வேண்டும் என்பதற்காக எந்த ஒரு எக்ஸ்ட்ரீம்கும் செல்லக்கூடியவராக இருந்தார். இருவரிடமும் சில தவறுகள் இருந்தது என்றாலும் கூட அன்றைக்கு வாக்குவாதம் நடந்த பொழுது பிரியங்கா தேவையில்லாத சில மோசமான வார்த்தைகளை வெளியிட்டார்.

அதுதான் அந்த பிரச்சனைக்கு காரணமாக இருந்தது இல்லை என்றால் மணிமேகலை கண்டிப்பாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருக்க மாட்டார் எனவே பிரியங்கா மீதுதான் தவறு என்று கூறி இருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version