இப்போ சொல்ற்றேன்.. ஒரு சீரியல் ஹீரோயின்னா இப்படித்தான் இருக்கணும்.. பனிவிழும் மலர்வனம் சீரியல் அதிரடி காட்சி..!

விஜய் டிவியில் நடிகை வினுஷா தேவி, சியமந்தா கிரண், நடிகர் அஸ்வந்த் திலக் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் பனிவிழும் மலர்வனம் என்ற ஒரு சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த ஜூலை மாதம் முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது.

பொதுவாக சீரியலில் ஹீரோயின்கள் எப்போதும் அழுது வடியும் முகத்துடன் தான் காட்சி அளிப்பார்கள். எப்போது பார்த்தாலும் அவர்களை சுற்றி பிரச்சனை இருக்கும்.

ஹீரோயின்களை ஒடுக்கும் விதமாக குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒருவர் நடந்து கொள்வார். அந்த குடும்பத்திலேயே இன்னொரு குடும்ப உறுப்பினர் ஹீரோயினுக்கு ஆதரவாக இருப்பார். இப்படித்தான் காலம் காலமாக சீரியல்களில் காட்சிகள் அமைக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், பனிவிழும் மலர்வனம் சீரியலில் ஹீரோயினாக நடித்துள்ள நடிகர் வினுஷா தேவி தைரியமான பெண்ணாக ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

இந்த சீரியலின் ப்ரோமோ காட்சி ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது. இதில் தன்னுடைய தந்தையின் சிகிச்சைக்காக வாங்கிய கடனை அடைக்க நான் வேலைக்கு செல்ல வேண்டும். அதற்கு நீங்கள் அனுமதிக்க வேணும் என்று வினுசா தேவி கோரிக்கை வைக்கிறார்.

ஆனால், அவருடைய குடும்ப உறுப்பினர்கள் சிலர் அதனை எதிர்க்கிறார்கள். மட்டுமில்லாமல் வினுசா தேவியிடம் சவாலும் விடுகிறார்கள். இந்த நேரத்தில் வழக்கமான ஹீரோயின்கள் போல் அழுது வடியாமல்.

சரி, சவாலை ஏற்றுக்கொள்கிறேன்.. பார்த்துக் கொள்ளலாம் என்ற தொணியில் நடிகை வினுஷா தேவி தைரியமாக தனக்கு எதிராக இருக்கும் அந்த குடும்ப உறுப்பினர்களை சமாளிக்கும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த ப்ரோமோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இப்போ சொல்றேன் ஒரு சீரியல் ஹீரோயின் தான் இப்படித்தான் இருக்கணும் என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version