சீரியல் நடிகைகள் திடீரென விலகுவதற்கு இது தான் காரணம்..ரகசியம் உடைத்த சீரியல் நடிகை..!

தமிழ் தொலைக்காட்சி இந்த நாடகங்களில் நடித்திருக்க கூடிய இந்த சீரியல் நடிகை முதல் முதலாக இயக்குனர் சங்கரின் எந்திரன் என்ற திரைப்படத்திலும் நடித்து திரை உலகிக்கு அறிமுகம் ஆனவர்.

இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சிங்காரம் பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்த இவர் சென்னை பல்கலைக்கழகத்தின் கல்லூரி படிப்பையும் முடித்திருக்கிறார். விலங்கியல் துறையில் இளம் கலை பட்டத்தை பெற்ற இவர் பல்வேறு வகையான சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

சீரியல் நடிகைகள் திடீரென விலகுவதற்கு இது தான் காரணம்..

இவர் தொலைக்காட்சி சீரியலான சின்னத்தம்பி என்ற நாடகத்தில் ஆன்ட்டி ஹீரோயினி கதாபாத்திரத்தில் நடித்ததை அடுத்து பெரும்பாலான மக்கள் மத்தியில் பேமஸான இவர் விஜய் டிவி மட்டுமல்லாமல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சுமங்கலி தொடரிலும் நடித்திருக்கிறார்.

மேலும் சின்னத்திரை நாடகங்களான பகல் நிலவு, சந்திரலேகா, ரங்கவிலாஸ், ஆபீஸ், என் வீடு, கல்யாண முதல் காதல் வரை, சினேகிதியே போன்ற சீரியலில் பக்குவமாக நடித்து இல்லத்தரசிகளின் மனதில் மட்டுமல்லாமல் இளைஞர்களாலும் விரும்பப்படும் சீரியல் நடிகையான இவருக்கு அதிகளவு ஃபாலோயர் இருக்கிறார்கள்.

அத்தோடு இவர் நடிப்பில் வெளிவந்த மாநகரம், தி ஃபேமிலி மேன், கலாம், தெகிடி, உப்பு கருவாடு, அங்குசம், நளனும் நந்தினியும், சரஸ்வதி சபதம் போன்ற திரைப்படங்களும் இவரது பெயர் சொல்லக்கூடிய வகையில் இருந்தது.

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் பேசிய இந்த நடிகை செல்வராகவன் படத்தில் நடிப்பது தான் மிகவும் கஷ்டம் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் அன்று போல் இன்று வரை விஜய் சேதுபதி ஒரு போல இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

மேலும் சீரியல்களில் இருந்து திடீரென விலகுவதற்கு என்ன காரணம் என்று கேட்டதற்கு அதற்கு உரிய ரகசியத்தை உடைத்து அந்த பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

ரகசியம் உடைத்த சீரியல் நடிகை..

அந்த வகையில் சீரியல்களில் நடிக்கும் போது ஒரு மாதத்தில் இரண்டு வாரங்கள் மட்டும் தான் வேலை இருக்கும் ஷூட்டிங் நடக்கும். அது போக மீதி இருக்கும் நாட்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கக் கூடிய சீரியல் நடிகைகள் புது கமிட்மெண்டுகளுக்கு தங்களை தயார் படுத்துவதும் சீரியல்களில் இருந்து நடிகைகள் விலகுவதற்கு காரணமாக உள்ளது என்று சொல்லி இருக்கிறார்.

மேலும் சில சந்தர்ப்பங்களில் சீரியல் நடிக்கக்கூடிய நடிகைகளை வேண்டாம் என்று சொல்லக்கூடிய சூழலை ஏற்படும். அதுவும் நிதி பற்றாக்குறை ஏற்படும் போது குறைந்த பணத்திற்கு நடிக்கக்கூடிய ஆர்டிஸ்டிகளை தேர்வு செய்து நடிக்க வைக்க கூடிய சமயத்திலும் இந்த விலகல் இருக்கும்.

அது போல வேறொரு சீரியல் நடிக்க ஒப்பந்தம் செய்யப்படும் போது இரண்டு சீரியல்களுக்கு இடையே தேதிகளில் கிளாஸ் ஆகக்கூடிய சூழ்நிலை ஏற்படும். அது மட்டுமல்லாமல் இரண்டு சீரியல்களிலும் ஒரே நேரத்தில் நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் சமயத்தில் சேனலில் இதைத்தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில் இங்கும் நடிக்க முடியாமல் அங்கும் நடிக்க முடியாமல் திண்டாட கூடிய சூழ்நிலை ஏற்படும்.

இது போலத்தான் நான் நடித்த மின்னலே சீரியலில் ஏற்பட்டது. வேறு வழியில்லாமல் அந்த சீரியலில் விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதற்கு காரணம் என் கணவர் அது அண்ணன் மகனின் எங்கேஜ்மென்ட். எனினும் இதை முதல் மாதத்திலேயே இந்த மாதத்தில் இந்த தேதிகளில் நான் இருக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன்.

இருந்தாலும் கதை வேறு விதமாக அமைந்த போது நான் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த சமயத்தில் எப்படி சீரியல் நடிக்க முடியும். ஏற்கனவே நான் கூறியுள்ளேன் என்று சொன்ன பிறகு கூட திடீரென என்ற சீன் வந்து விட்டது என்று சொன்னார்கள்.

அந்த சமயத்தில் என்னால் கட்டாயம் ஷூட்டிங் கடந்த கொள்ள முடியாத காரணத்தால் எனக்கு பதில் வேறொரு நபர் என்றாகி விடுகிறது. எனவே தான் சீரியல் நடிகைகள் சீரியல்களில் இருந்து ஏன் திடீர் என விலகுகிறார்கள் என்ற ரகசியத்தை நடிகை ரேகா சுரேஷ் பேட்டியில் போட்டு உடைத்திருக்கிறார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam