அன்னிக்கு நைட் நடந்த விஷயம்.. நெஞ்சே வெடிச்சிடும் போல இருந்துச்சு.. அவதிப்பட்ட நடிகை சாந்தி வில்லியம்ஸ் ..!

சின்னத்திரையில் நிறைய சீரியல்களில் நடித்து அதன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகை சாந்தி வில்லியம்ஸ். பெரும்பாலும் ஒரு சீரியல் பிரபலமடைகிறது என்றால் அதில் முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்கும் ஹீரோ நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும்தான் வரவேற்புகள் அதிகமாக இருக்கும்.

ஆனால் சாந்தி வில்லியம்ஸ் நடிக்கும் சீரியல்களில் மட்டும் வில்லி கதாபாத்திரங்கள் அதிக பிரபலம் அடையும். ஏனெனில் அதிகபட்சம் சாந்தி வில்லியம் வில்லி கதாபாத்திரத்தில்தான் நடித்து வருகிறார். இவர் ஒரு தனிப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய நடிகையாக இருப்பதால் தொடர்ந்து வரவேற்பை பெற்று வரும் நடிகையாக இருந்து வருகிறார்.

அன்னிக்கு நைட் நடந்த விஷயம்

கடந்த 20 வருடங்களாக ஏகப்பட்ட சீரியல்களில் சாந்தி வில்லியம்ஸ் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சாந்தி வில்லியம்ஸ்க்கு வெள்ளி திரையில் பெரிதாக வாய்ப்புகள் என்பது கிடைக்கவில்லை.

அதற்கு பிறகு அவர் சின்னத்திரையில் வாய்ப்புகளை தேட துவங்கினார் சின்னத்திரையில் நடித்து வந்த சாந்தி வில்லியம்ஸ்க்கு மெட்டி ஒலி தொடர் ஒரு பெரிய மாற்றமாக அமைந்தது. மெட்டிஒலி தொடரில் ராசம் என்கிற கதாபாத்திரத்தில் அவர் நடித்ததன் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைய தொடங்கினார்.

நெஞ்சே வெடிச்சிடும் போல இருந்துச்சு

அந்த சீரியலில் உள்ள ஒட்டுமொத்த கதாபாத்திரங்களை விடவும் சாந்தி வில்லியம்ஸின் கதாபாத்திரம்தான் வெகுவாக பேசப்பட்டதாக இருந்தது இதனை தொடர்ந்து சீரியல்களில் அதிக வாய்ப்புகளை பெற துவங்கினார் சாந்தி வில்லியம்ஸ்.

மெட்டி ஒலி தொடர் முடியும் தருவாயில் தன்னுடைய மனநிலை எப்படி இருந்தது என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் பேசியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது மெட்டி ஒலி சீரியல் முடியப்போகிறது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.

நடிகை சாந்தி வில்லியம்ஸ்

நான் திரும்பத் திரும்ப இயக்குனரிடம் சென்று இந்த சீரியல் முடியப்போகிறது என்று கேட்டேன். அவர் பதில் ஏதும் கூறாமலே இருந்தார். கடைசியாக ஒருநாள் இரவு 11 மணிக்கு மெட்டி ஒலி சீரியலின் கடைசி காட்சிகள் படமாக்கப்பட்டன. அந்த காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு சீரியலில் நடித்த அனைவரும் எங்கோ சென்று விட்டனர்.

யாரையுமே காணவில்லை இயக்குனரையும் காணவில்லை நான் மிகவும் தனிமையாக உணர்ந்தேன். சீரியல் முடிந்தது எனக்கு மிகவும் கவலை அளித்தது எனது நெஞ்சே வெடித்து விடும் போல இருந்தது என்று கூறியிருக்கிறார் சாந்தி வில்லியம்ஸ்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version