க்யூட் காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த்.. வாழ்த்துக்கள் சொன்ன ரசிகர்கள்..

இந்த உலகில் காதல் என்பது ஏற்படாத நபர்களை இல்லை என்று சொல்லக்கூடிய வகையில் காதலில் விழுந்தவர்கள் அதிக அளவு இருக்கிறார்கள். அந்த வகையில் சீரியல் நடிகர் வெற்றி வசந்த் தனது அழகிய காதலிக்கு நேர்த்தியான முறையில் பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார்.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் வாழ்த்துக்களையும் அள்ளிச் சென்றுள்ளது. மேலும் ரசிகர்கள் பலரும் இன்று போல் என்றும் இவர்கள் இப்படி இணைந்து இருக்க வேண்டும் என்று வாழ்த்தி வருகிறார்கள்.

க்யூட் காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த்..

விஜய் டிவியில் சன் டிவிக்கு டப் கொடுத்த கூடிய வகையில் பல்வேறு வகையான சீரியல்கள் தற்போது களம் இறக்கப்பட்டு வெகுஜன பார்வையை பெற்றுள்ளது. அந்த வரிசையில் சிறகடிக்க ஆசை சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

எனினும் இந்த சீரியலானது கடந்த சில வாரங்களாக சரியாக டிஆர்பி ரேட்டிங்கை பெற்று தரவில்லை என்பது வருந்தத்தக்க விஷயம் தான். இதற்கு காரணம் கதையில் கொஞ்சம் விறுவிறுப்பு குறைந்துள்ளதை அடுத்து டிஆர்பியில் ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதை யூகிக்கக்கூடிய வகையில் கதை செல்வதாலும் விறுவிறுப்பாக கதையம்சம் இல்லாததாலும் ரசிகர்கள் அது கிடைக்குமா என்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இந்த சீரியலின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான நடிகராக வளர்ந்திருக்கும் வெற்றி வசந்த் தனது க்யூட் காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து போட்டிருக்கும் பதிவு தற்போது ரசிகர்களின் லைக்குகளை அள்ளி குவித்துள்ளது.

வாழ்த்துக்கள் சொன்ன ரசிகர்கள்..

ஏற்கனவே நடிகர் வெற்றி வசந்த் தன்னுடைய காதலி யார் என்பதை சில நாட்களுக்கு முன்பு சொல்லி இருந்தார் அவர்தான் பொன்னி சீரியல் நடிகையான வைஷ்ணவி என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

இதனை அடுத்து இவர்கள் இருவரும் தனியார் நிகழ்ச்சிகளில் அதிக அளவு கலந்து கொண்டு வருவதோடு வெளிநாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இன்று தனது காதலியின் பிறந்தநாள் என்பதால் தனது க்யூட்டான காதலிக்கு க்யூட்டான புகைப்படத்துடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் வெற்றி வசந்த் கூறியிருக்கிறார்.

இந்த விஷயம் தான் தற்போது இணையம் முழுவதும் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி இருப்பதோடு இவர்கள் இன்று போல் என்றும் இணைந்து இருக்க வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள்.

மேலும் ரசிகர்கள் பலரும் அவரது காதலிக்கு வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்த வண்ணம் இருப்பதால் அந்த ஜோடிகள் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam