எனக்கு இவர் கூடதான் கல்யாணம்? நிம்மதியா வாழ விடுங்க ப்ளீஸ்.. கண் கலங்கிய சிவாங்கி..!

சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் பாடகி சிவாங்கி. சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி பலரையும் சினிமாவிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமாக்கி இருக்கிறது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சி துவங்கியது முதலே அதில் பங்கு பெற்ற பலரும் தற்சமயம் சினிமாவில் பாடகர்களாக/ பாடகிகளாக இருந்து வருகின்றனர்.

சிவாங்கி சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றவர் ஆவார். அதற்கு பிறகு அவருக்கு விஜய் டிவியில் வரவேற்பு அதிகமாக இருந்தது. இதனை தொடர்ந்து அவருக்கு குக் வித் கோமாளியில் பங்கு பெறுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.

இவர் கூடதான் கல்யாணம்?

குக் வித் கோமாளி முதல் சீசனில் பெரிதாக அவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் இரண்டாவது சீசன் துவங்கியப்போது அதில் சிவாங்கி முக்கிய கோமாளியாக இருந்தார். அவருக்கென்று ஒரு ரசிக கூட்டம் உண்டானது.

அதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் அதிக ஃபாலோவர்ஸ்களை கொண்ட ஒரு பிரபலமாக மாறினார் சிவாங்கி. அதற்குப் பிறகு நிறைய கடை திறப்பு விழாக்களிலும் கல்லூரிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராக சிவாங்கி செல்ல துவங்கினார்.

நிம்மதியா வாழ விடுங்க

அந்த அளவிற்கு சிவாங்கி பிரபலம் அடைந்தவராக மாறினார். இந்த நிலையில் சிவாங்கியின் காதல் குறித்து தொடர்ந்து சின்ன திரையில் சில செய்திகள் வலம் வந்து கொண்டே இருக்கின்றன. ஆரம்பத்தில் சிவாங்கி அஸ்வின் என்கிற நடிகரை காதலித்து வந்ததாக பேச்சுக்கள் இருந்தன.

அஸ்வின் குக் வித் கோமாளி சீசன் இரண்டில் குக்காக கலந்து கொண்டவர் அவர்கள் இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக அப்பொழுது நிறைய பேச்சுக்கள் இருந்து வந்தன. ஆனால் அதற்குப் பிறகு அது உண்மை இல்லை என்று கூறப்பட்டு வந்தது.

கண் கலங்கிய சிவாங்கி

இந்த நிலையில் தற்சமயம் நடிகை சிவாங்கி பாடகர் ஹர்ஷா வதனை காதலித்து வருவதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. ஹர்ஷா வதன் வித்யாசாகரின் மகன் ஆவார். இவரோடு சேர்ந்து நிறைய பாடல்களை சிவாங்கி பாடி இருக்கிறார்.

இந்த நிலையில் இந்த வதந்திக்கு பதில் அளித்த சிவாங்கி கூறும் பொழுது என்னை வாழ விடுங்கள் தொடர்ந்து என்னைக் குறித்து ஏதாவது ஒரு வதந்தியை பரப்பி வருகின்றனர். இதெல்லாம் எந்த வகையிலும் உண்மை இல்லை முதலில் நான் காதலித்து திருமணம் செய்து கொள்ள மாட்டேன் இப்பொழுது திருமணத்தை பற்றி நான் சிந்திப்பதாகவே இல்லை என்று கூறியிருக்கிறார் சிவாங்கி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version