நானே ராஜா.. டிஆர்பி-யில் விஜய் டிவிய மண்ண கவ்வ வைச்ச சன் டிவி.. டாப் 10 சீரியல் லிஸ்ட்!

சீரியல் என்றாலே இல்லத்தரசிகளுக்கு இனிப்பான விஷயமாக இருக்கும் அதுவும் காலை முதல் இரவு வரை இடைவிடாது சீரியல்களை பார்த்து மகிழ்வதோடு மட்டுமல்லாமல் அந்த சீரியல்களில் சொல்லப்பட்டிருக்கும் கதைகளை தங்கள் குடும்பக்கதையோடு ஒப்பிட்டு நோக்குவார்கள்.

அந்த வகையில் இன்று இருக்கக்கூடிய போட்டியான சூழ்நிலையில் சன் டிவி, ஜீ டிவி, விஜய் டிவி என அத்தனையும் மக்களுக்கு சிறப்பான சீரியல்களை கொடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

நானே ராஜா..

சன் டிவி ஆரம்ப காலம் தொட்டு இன்று வரை நானே ராஜா என்னை யாரும் அசைக்க முடியாது என்ற ரீதியில் வகை வகையான சீரியல்களை கொடுத்து ரசிகர்கள் பட்டாளத்தை தனக்காக பெற்றுள்ளது.

இந்த சீரியல்களில் ஒவ்வொரு வாரமும் டிஆர்பி பற்றிய தகவலை அறிந்து கொள்ள ரசிகர்கள் அனைவரும் ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில் இந்த வாரம் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன தெரியுமா.

இந்த வருடத்தின் 39 ஆவது வாரத்தில் டிஆர்பிஎல் டாப் 10 இடத்தை கைப்பற்றி இருக்கும் சீரியல்கள் என்னென்ன என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

அதன் அடிப்படையில் ரசிகர்கள் டிஆர்பியில் முதல் இடத்தை பிடிக்கும் என்று ஆவலோடு எதிர்பார்த்த இந்த சீரியலில் இவர் எழில் மற்றும் கயலில் திருமணம் நடைபெற இருப்பதால் இந்த சீரியலின் மீது ரசிகர்களுக்கு அதிக அளவு ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் கயல் சீரியலானது 10.03 புள்ளிகள் உடன் தர வரிசையில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இதனை அடுத்து இரண்டாவது இடத்தில் சிங்க பெண்ணே சீரியல் உள்ளது. இதில் அன்பு மற்றும் ஆனந்தியின் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் இந்த தொடரானது 8.86 புள்ளிகள் பெற்றுள்ளது.

மேலும் சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் புது தொடரான மூன்று முடிச்சு இந்த வாரம் 8.71 டிஆர்பி ரேட்டிங்கை பெற்று மூன்றாவது இடத்தை பெற்றிருக்கக் கூடிய சூழ்நிலையில் நந்தினியின் நடிப்பு வெகுவாக பாராட்டப்படுவதோடு மட்டுமல்லாமல் சூர்யாவின் திருமணம் குறித்து அனைவராலும் பேசப்படுகிறது.

நான்காவது இடத்தில் மருமகள் சீரியல் உள்ளது இதில் பிரபு மற்றும் ஆதிரையின் திருமணத்தை எவ்வளவு கஷ்டப்பட்டு நடத்தி வருகிறார்கள் என்பதை தத்துரூபமாக இருவரும் நடித்துக் காட்டி இருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது.

ஐந்தாவது இடத்தில் சுந்தரி சீரியல் இதற்கு 8.52 அளவு புள்ளிகள் கிடைத்துள்ளது. இதனை அடுத்து தான் விஜய் டிவியின் தொடர்கள் இடம் பிடித்து உள்ளது.

டிஆர்பியில் விஜய் டிவிய மண்ண கவ்வ வைச்ச சன் டிவி..

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ஆறாவது இடம் 7.88 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ள நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு தற்போது எகிர உள்ளது.

 

அதுபோலவே ஏழாவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் இருப்பதால் இது பெற்றிருக்கும் புள்ளிகள் 7. நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை எகிர வைக்கக்கூடிய கதைக்களமாக இந்த சீரியல் உள்ளது. மேலும் டிஆர்பி யின் முன்னேற்றத்திற்கு இதனை ஒரு காரணமாக சொல்லலாம்.

இந்நிலையில் முதல் ஐந்து இடங்களை தக்க வைத்து தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கும் சன் டிவி விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டை தவிடு பொடியாக்கி மண்ணை கவ்வ வைத்து விட்டது என்று சொல்லலாம்.

டாப் 10 சீரியல் லிஸ்ட்..

எனவே டாப் 10 சீரியல்களில் முதல் ஐந்து இடத்தை தக்க வைத்திருக்கும் சன் டிவியின் கயல், சிங்க பெண்ணே, மூன்று முடிச்சு, மருமகள், சுந்தரி போன்ற தொடர்கள் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளதோடு மட்டுமல்லாமல் பெரியளவு ரசிகர் வட்டாரத்தையும் கொண்டுள்ளது.

சீரியல் விரும்பிகள் இந்த டிஆர்பி ரேட்டை அறிந்து கொண்டு தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version