விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் 8 நிகழ்ச்சி நேற்று தன் பயணத்தை ஆரம்பித்தது. முதல் நாளிலேயே அசத்தலான அணுகு முறையை விஜயசேதுபதி செய்ததை அடுத்து பலரும் அவருக்கு பாராட்டுதல்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.
இந்த போட்டியில் தயாரிப்பாளர் ரவீந்தர், தர்ஷா குப்தா, தீபக், விஜே விஷால் என 18 போட்டியாளர்கள் பங்கு பெறக் கூடிய சூழ்நிலையில் தற்போது விஜய் டிவி வழங்கும் பிக் பாஸ் சீசன் 8-ல் 8 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து இருக்கிறார்கள்.
பிக் பாஸ் 8
இதனை அடுத்து 24 மணி நேரத்திலேயே முதல் எவிக்ஷன் இருக்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் இந்த நிகழ்வானது ஒரு பிரம்மாண்டமான மாற்றமாக பார்க்கப்படுகிறது. மேலும் வெளியேறக்கூடிய நபரை மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியில் கொண்டு வருவார்களா? என்ற கேள்வி ரசிகர்களின் மத்தியில் எழுந்துள்ளது.
பிக் பாஸ் சீசன் 8-ல் காட்டப்பட்ட வீடு மிகவும் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக ஹோம்டூரின் மூலம் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் அன்பாக பேசும் விஜய் சேதுபதி எப்போதும் இப்படி இருக்க மாட்டேன் என்ற எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.
இந்த நிகழ்ச்சி தொடர்ந்து 100 நாட்கள் நடைபெற உள்ள நிலையில் சுவாரசியத்திற்கு பஞ்சம் இருக்காது என்று அனைவரும் தற்போது பேசி வருகிறார்கள்.
அவர பார்த்து பயந்தாங்க.. ஆனா விஜய் சேதுபதி வேற மாதிரி..
ஆரம்பத்தில் பிக் பாஸ் சீசன் 1 முதல் சீசன் 7 வரை கமலஹாசன் தொகுத்து வழங்கியிருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். அப்படி அந்த நிகழ்ச்சிகளில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்கள் முதலில் கமலஹாசனை பார்த்ததுமே பேசுவதற்கு பயம் கொண்டு திணறினார்கள்.
ஆனால் இன்று பிக் பாஸ் சீசன் 8 நிலைமையை வேறு விஜய் சேதுபதி அனைவரோடும் நட்பு முறையில் பேசி பழகுவதால் இந்த நிகழ்ச்சியில் சுவாரசியத்திற்கு கொஞ்சமும் பஞ்சம் இருக்காது என்று கூறியிருக்கிறார்.
எனினும் விஜய் சேதுபதி எப்போதும் இப்படி இருப்பார் என்று நம்ப முடியாது. சில சமயங்களில் கடுமையாக நடந்து கொள்ள வாய்ப்புகள் இருப்பதாக அவரே எச்சரிக்கை விடுத்திருப்பது பலர் மத்தியில் இன்னும் நிகழ்ச்சி பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.
பிக் பாஸ் vs வனிதா விஜயகுமார் பேச்சு..
இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் பிக் பாஸ் வெர்சஸ் வனிதா விஜயகுமார் நிகழ்ச்சியில் பேசும் போது பேட்மேன் உள்ளிட்ட அனைவரது விஷயங்கள் பற்றி விவரமாக அவர் வானில் பேசி அசத்தியிருக்கிறார்.
மேலும் உடல் பருமனாக இருப்பது அவர்கள் குற்றம் அல்ல. அது குறித்து பாடி ஷேமிங் செய்வது தவறான விஷயம் என்பதை சுட்டிக்காட்டி இருக்கக்கூடிய வனிதா விஜயகுமார் அது ஒரு நோய் என்றும் கூறியிருக்கிறார்.
ஆரம்பத்தில் வனிதா விஜயகுமாரும் இப்படி குண்டாகத்தான் இருந்திருக்கிறார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவுடன் உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என சொல்லி இருக்கிறார்.
மேலும் தயாரிப்பாளர் பேட்மேன் ரவீந்தரை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இவர் பரிந்துரை செய்ததாகவும் உலகநாயகன் கமலஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போல விஜய் சேதுபதியும் தோ இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது ஃபயராக செயல்பட்டதாக பரபரப்பாக பேசி இருக்கிறார்.