என்னடா.. சொல்றீங்க.. இது எப்ப நடந்தது.. விஜய் டிவியை விட்டு விலகிடாங்களா அந்த பிரபலம் – வெளிவந்த வேதனை தகவல்..

ஏற்கனவே விஜய் டிவியில் பிரியங்கா மற்றும் மணிமேகலையின் பஞ்சாயத்து இன்னும் ஓயாத நிலையில் மற்றொரு திடுக்கிடும் தகவல் வெளிவந்து அனைவரும் மத்தியிலும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

பெண்களால் இந்தத் துறையில் சாதிக்க முடியாது என்ற நிலையை மாற்றி அமைத்த பெண் கலைஞர் ஒருவர் தற்போது விஜய் டிவியில் இருந்து வெளியேற இருப்பதாக அரசல் புறசலாக செய்திகள் வெளி வந்து அனைவரையும் அதிர்ச்சிகள் தள்ளியுள்ளது.

என்னடா.. சொல்றீங்க.. இது எப்ப நடந்தது..

இதனை அடுத்து சோகத்தில் மூழ்கி இருக்கும் இணையதள வாசிகள் என்னடா சொல்றீங்க இது எப்ப நமக்கு தெரியாமல் நடந்தது என்ற ரீதியில் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி இருக்கிறார்கள்.

இதற்குக் காரணம் விஜய் டிவியில் முன்னணி பிரபலங்களில் ஒருவராக திகழும் அறந்தாங்கி நிஷா நகைச்சுவை செய்து அனைவரையும் சிரிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல் தனக்கு இருக்கும் அத்தனை நெகட்டிவ் விஷயங்களையும் பாசிட்டிவாக மாற்றி அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தவர்.

கருப்பாக இருக்கும் இவரால் நகைச்சுவையால் அனைவரையும் கவர முடியுமா? என்று நினைத்த நிலையில் என்னால் முடியும் என்று சாதித்துக் காட்டிய இந்த பெண்மணி கலக்கப்போவது யார் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகம் ஆனவர்.

இதனை அடுத்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராமர் வீடு, மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ், சின்னத்திரை, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெருவாரியான ரசிகர்களை பெற்றுக் கொண்டார்.

விஜய் டிவியை விட்டு விலகிடாங்களா அந்த பிரபலம்..

இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் சாய் பல்லவியின் தோழியாக ஆட்டோ ஓட்டுனராக நடித்திருப்பது உங்கள் நினைவில் இருக்கலாம். அதுபோல ஆண் தேவதை, கோலமாவு கோகிலா, திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

அத்தோடு அண்மையில் வெளிவந்த ராயன் திரைப்படத்திலும் தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கும் அறந்தாங்கி நிஷா தான் தற்போது விஜய் டிவியை விட்டு விலகி விட்டதாக விஷயம் கசிந்து வந்தது.

அப்படி சோசியல் மீடியாவில் பரவி வரும் இந்த விஷயத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருக்கும் நிஷா யாருடா இந்த வேலையை பார்த்தீங்க.. அதுவும் எனக்குத் தெரியாம.. என்று தன்பாணியில் பதிவினை பதிவிட்டு இருப்பதோடு hiyooooo என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் பெருமூச்சுவிட்டு அப்ப நீங்க விஜய் டிவியை விட்டு விலகலயா நாங்க அதிர்ந்து போய் விட்டோம் என்ற தங்களது அதிர்ச்சியினை பக்குவமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

வெளிவந்த வேதனை தகவல்..

இதனை அடுத்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிஷா மணிமேகலை, பிரியங்கா பிரச்சனை குறித்து பேசியதோடு உண்மையில் அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாத போது நான் அந்த இடத்தில் இல்லாமல் இருந்த சமயத்தில் எப்படி அது பற்றி விமர்சனம் செய்வது என்று சொல்லி இருக்கிறார்.

மேலும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அவர்களது கேரக்டர் குறித்தும் எந்த இடத்திலும் பேச தேவையில்லை. ஒரு பெண்ணை இழிவு படுத்தும் படி இருக்கும் எந்த ஒரு பதிவுகளையும் தயவு செய்து பதிவிட வேண்டாம் என்று ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இதைத்தொடர்ந்து அறந்தாங்கி நிஷா விஜய் டிவியில் இருந்து வெளியேறவில்லை. அது ஒரு வதந்தியாக இருக்கலாம் என்று ரசிகர்கள் பேசி வருவதோடு இந்த விஷயத்தை பற்றி அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version