ரொம்ப நாள் கழித்து மணிமேகலைக்கு பதிலடி கொடுத்த பிரியங்கா.. இவ்வளவு ஓப்பனா சொல்லிட்டாரே..!

குக் வித் கோமாளி முடிந்திருந்தாலும் கூட இன்னமும் மணிமேகலைக்கும் பிரியங்காவிற்கும் இருக்கும் சண்டை என்பது ஓயவில்லை. குக் வித் கோமாளி நிகழ்ச்சி துவங்கிய காலகட்டம் முதலே அதில் முக்கிய கோமாளியாக இருந்து வந்தவர் மணிமேகலை.

முதல் சீசனின் பொழுது குக் வித் கோமாளி பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அப்போதைய சமயங்களில் அதை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற வைப்பதற்கு தொடர்ந்து முயற்சி செய்தவர்கள் அதிலிருந்த கோமாளிகள் தான்.

மணிமேகலைக்கு பதிலடி

அப்படியாக குக் வித் கோமாளியில் முக்கிய கோமாளிகளாக மணிமேகலை, பாலா, புகழ், சிவாங்கி மாதிரியான ஆட்கள் இருந்து வந்தனர். இந்த ஐந்தாவது சீசனில்தான் முதன்முதலாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பை பெற்றார் மணிமேகலை.

ஆனால் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலும் அவருக்கும் வி.ஜே பிரியங்காவிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகினார் மணிமேகலை. மேலும் அதோடு இல்லாமல் ஒரு வீடியோவையும் வெளியிட்டு இருந்தார்.

தில் பிரியங்கா மிகவும் மோசமாக நடந்து கொண்டதால்தான் நிகழ்ச்சியிலிருந்து விலகினேன் என்று அவர் கூறியிருந்தார். மேலும் திரும்பவும் ஒரு வீடியோ வெளியிட்டு அதில் பிரியங்காவிற்கு ஆதரவாக இருப்பவர்களையும் விமர்சித்து பேசியிருந்தார் மணிமேகலை.

வி.ஜே பிரியங்காவின் பதில்:

அதனை தொடர்ந்து மணிமேகலைக்கு எதிரான கருத்துக்கள் நிறைய வர துவங்கின. ஆனால் இதுகுறித்து வாயை திறக்காமல் இருந்து வந்தார் வி.ஜே பிரியங்கா. இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் ஐந்தின் டைட்டில் வின்னராக ஆனார் பிரியங்கா.

இதுகுறித்து தற்சமயம் அவர் பேசி இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது என்னை சுற்றி இருப்பவர்களை எப்பொழுதுமே மகிழ்ச்சியாக உணர வைப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. இதற்கு முன்பு கிச்சன் சூப்பர் ஸ்டார் என்கிற நிகழ்ச்சியில் இதே போல கலந்து கொண்டேன். ஆனால் அதில் தோல்வி அடைந்து விட்டேன் இப்பொழுது 10 வருடங்களுக்குப் பிறகு குக் வித் கோமாளியில் டைட்டில் வின்னராக ஆகியுள்ளேன்.

இவ்வளவு ஓப்பனா சொல்லிட்டாரே

சமையலறையில் எனது திறமையை மெருகேற்ற உதவிய எனது பயிற்சியாளருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ள நினைக்கிறேன். ரசிகர்கள் அனைவரும் என்னை ஊக்கப்படுத்தியதும் நான் நன்றாக சமைப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

என்னை பொருத்தவரை எனக்கு போட்டியாளர்கள் என்று யாரும் கிடையாது நான் தான் எனக்கு போட்டியாளர் என்று ரஜினியின் வசனத்தை கூறியிருக்கிறார் வி.ஜே பிரியங்கா. இதனை தொடர்ந்து மணிமேகலை எல்லாம் எனக்கு போட்டியாளர் கிடையாது என்பதை தெரிவிக்கும் வகையில் தான் வி.ஜே பிரியங்கா இப்படி கூறியுள்ளார் என்கின்றனர் ரசிகர்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam