ஒவ்வொரு காலகட்டத்திலும் விஜய் டிவியில் ஏதாவது ஒரு சீரியல் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற சீரியலாக இருந்து வரும். அந்த வகையில் தற்சமயம் அதிக பிரபலமான ஒரு சீரியலாக சிறகடிக்க ஆசை சீரியல் இருந்து வருகிறது.
சிறகடிக்க ஆசை சீரியலானது 2023 ஆம் ஆண்டு துவங்கி தற்சமயம் 500 எபிசோடுகளை தாண்டியும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஒளிபரப்பாகி வருகிறது.
வாழ்க்கையை அழிக்க பார்ப்பாங்க
இந்த நிலையில் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக கோமதி பிரியா என்கிற நடிகை நடித்த வருகிறார். இவர் ஆரம்பத்தில் கலர்ஸ் தமிழ் சேனல் துவங்கிய காலகட்டத்தில் அதில் ஓவியா சீரியலில் நடித்தார். அந்த சீரியல் பெரிதாக வரவேற்பு பெறவில்லை.
இருந்தாலும் அது தான் அவரது முதல் சீரியலாக இருந்தது. அதனை தொடர்ந்து பெரிதாக வாய்ப்புகள் வராமல் இருந்த கோமதி பிரியாவிற்கு சிறகடிக்க ஆசை ஒரு முக்கியமான சீரியலாக அமைந்தது.
சிறகடிக்க ஆசை
இந்த சீரியலில் இவரது கதாபாத்திரம் மக்கள் மத்தியில் வரவேற்பு பெரும் கதாபாத்திரமாக இருந்தது. மேலும் ஒரு கட்டத்திற்கு மேல் விஜய் டிவியில் டி.ஆர்.பியில் முதல் இடத்தை பிடித்த சீரியலாக மாறியது சிறகடிக்க ஆசை.
எதிர்நீச்சல் மாதிரியான சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சமயத்திலேயே அவற்றை மிஞ்சிய பார்வையாளர்களை கொண்டிருந்தது சிறகடிக்க ஆசை. இந்த நிலையில் இந்த சீரியலின் வெற்றியை தொடர்ந்து இந்த சீரியல் மலையாளத்திலும் சீரியல் ஆக்கப்பட்டு வருகிறது.
அதிலும் இவர்தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் தற்சமயம் திடீரென்று மலையாள சீரியலில் இருந்து விலகி இருக்கிறார் கோமதி பிரியா. இதற்கு என்ன காரணம் என்று யாருக்கும் தெரியவில்லை.
இதுதான் காரணமா
ஆனால் வேறு ஒரு நடிகையை அதற்கு பதிலாக வைத்து சீரியலை நடத்தி வருகின்றனர். தமிழை போலவே மலையாளத்திலும் கோமதி பிரியா பிரபலமாகிவிட்டதால் வேறு நடிகை அந்த சீரியலில் நடிப்பதை பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
திரும்ப கோமதி பிரியாவே வந்து நடிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டு வருகின்றனர் இந்த நிலையில் இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் கோமதி பிரியா.
அதில் யாருக்கும் உங்கள் வாழ்க்கையை அழிப்பதற்கான உரிமையை கொடுக்காதீர்கள். ஒருவர் நினைத்தால் உங்களை காயப்படுத்த முடியும் ஆனால் அவர்களால் நிச்சயம் உங்களை அழிக்க முடியாது. உங்களால் சண்டையிட முடியும் என்றால் எந்த ஒரு பிரச்சனையையும் உங்களால் தாண்டி வர முடியும்.
எனவே எங்கேயுமே தன்னம்பிக்கையை விட்டு விடாதீர்கள் என்று பதிவிட்டு இருக்கிறார் இதன் மூலமாக மலையாளத்தில் இவர் சீரியலில் நடிக்கும் போது ஏதோ மோசமான நிகழ்வு நடந்திருக்கிறது அதன் காரணமாகதான் அந்த சீரியலில் இருந்து வெளியேறி இருக்கிறார் என்று தெரிகிறது.