பீஸ்ட் படத்தை தடை செய்ய வேண்டும்..! – தமிழக இஸ்லாமிய அமைப்பு வலியுறுத்தல்..!

பீஸ்ட்’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வருகிற 13 ஆம் தேதி வெளியாகிறது.இந்த நிலையில் இந்தப் படத்தின் இந்தி டிரெய்லர் வெளியாகியுள்ளது.

இந்தி டிரெய்லரை பகிர்ந்த நடிகர் வருண் தவான், பீஸ்ட் இந்தி டிரெய்லரை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.எப்பொழுதும் நான் விஜய் சாரின் பெரிய ரசிகன் எனக் குறிப்பிட்டுள்ளார். தெலுங்கு டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது

இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த கேலக்ஸி திரையரங்கம் பீஸ்ட் படக் கதையை பகிர்ந்துள்ளது.

அதில் நகரின் பரபரப்பான பகுதியை சர்வதேச பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகின்றனர். பயங்கரவாத அமைப்பின் தலைவரை விடுவிக்கக்கோரி இந்திய அரசுக்கு மிரட்டல் விடுக்கின்றனர்.

இந்த நிலையில் பயங்கரவாதிகளை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்பிரிவின் தலைவருக்கு, பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட பகுதியில் ரா உளவு அமைப்பின் முன்னாள அதிகாரி இருப்பது தெரியவருகிறது. இதனையடுத்து பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டவர்களை மீட்க, அவரது உதவியை நாடுகின்றனர்.

அந்த முன்னாள் அதிகாரி பயங்கரவாதிகளுக்கு எதிராக செயல்படத் தொடங்குகிறார். அதன் ஒரு பகுதியாக பயங்கரவாத அமைப்பின் தலைவரை அரசு விடுவிக்க சம்மதிக்கிறது. இந்த நிலையில் முன்னால் உளவு அதிகாரி புத்திசாலி தனமாக செய்லபட்டு பயங்கரவாதிகளிடமிருந்து சிறை பிடிக்கப்பட்டவர்களை மீட்டு, பயங்கரவாதிகளை ஒழித்துகட்டுகிறார் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில், பீஸ்ட் திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டும் படியாக கதை இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது இஸ்லாமியர்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பைக் கடைபிடித்துவருகின்றனர். இந்தச் சூழலில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ள விஜயின் பீஸ்ட் திரைப்படம் வெளிவந்தால் பிரச்னை ஏற்படும். எனவே, பீஸ்ட் திரைப்படம் வெளியிட உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் தடைவிதிக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லீம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …