தட்டை பயறு கத்திரிக்காய் குழம்பு

 

வீட்டில் அதிகம் காய்கள் இல்லாத சமயத்தில் சட்ட பெயரையும் கத்திரிக்காயின் கொண்டு செய்யும் குழம்பு மிகவும் பிரசித்தம். இந்த குழம்பினை விரும்பி உண்பவர்கள் ஏராளமான பேர் உள்ளார்கள் இதனை செய்தால் தொட்டுக்கொள்ள பொறியலே தேவையில்லை. தட்டப்பயிறினை தொட்டுக்கொண்டு சாதத்தை நாம் மிக ஜோராக உண்டு விடலாம். அப்படிப்பட்ட இந்த தட்டபயிர் கத்தரிக்காய் குழம்பு செட்டிநாடு முறையில் எப்படி செய்யலாம் என்பதை காணலாம்.

இந்தக் குழம்பை உண்பதால் வாயுத் தொல்லையால் சிரமப்படுவார்கள் என்று பெரியவர்கள் இந்த குழம்பை ஒதுக்கி வைக்கிறார்கள் அதற்கான அவசியமே இல்லை இதை இந்த முறையில் செய்யும் போது  வாயுத் தொல்லைக்கு இடம் தராது.

ஆம் நீங்கள் குழம்பில் சேர்க்கும் தட்டிய பூண்டு, சோம்பு, சீரகம் இவை அனைத்தும் வாய்வுத் தொல்லை குறைக்கும் குணமுடையது.

தேவையான பொருட்கள்:

தட்டை பயறு-1/2

கோப்பை கத்திரிக்காய் 2 அல்லது 3

தக்காளி-1

வெங்காயம்-1

உப்பு-1 தேக்கரண்டி

மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி

புளி கரைத்த சாறு-2 மேஜைக்கரண்டி (சிறி எலுமிச்சை அளவு புளி எடுத்து கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்)

சாம்பார் மிளகாய் போடி-2 தேக்கரண்டி

மசாலா அரைத்தும் செய்யலாம் குழம்பு அதிக கனிசமான அளவு கிடைக்கும்.

தாளிக்க:

எண்ணெய் -1 மேஜைக்கரண்டி                                                                                       

சோம்பு-1/2

சீரகம்-1/4

கறிவேப்பிலை

தட்டிய பூண்டு பூண்டு- 3 பல் கடைசியாக சேர்க்கவும்

செய்முறை:

தட்டை பயறு வாணலியில் சிறிது வெதுப்பி (வறுத்து) பின் சிறிது மலர வேகவைத்துக் கொள்ளவும்.

இது வெந்ததும், உப்பு, கரைத்த புளி, மஞ்சள் தூள், மசாலா போடி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

பிறகு 3 நிமிடம் கொதித்ததும் தாளிதம் செய்யவும், வெங்காயம், கறிவேப்பிலை, வெட்டிய கத்தரிக்காய், தக்காளி, சேர்த்து வதக்கவும்.

இந்த தாளித்து,  குழம்பை சேர்த்து 3-5 நிமிடம் இளந்தீயில் கொதிக்க விடவும் நன்கு கொதித்து காய் வெந்ததும் தட்டிய பூண்டு சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.