அந்த லெவலு..! – தளபதி 67 குறித்து வெளியான சூப்பர் அப்டேட்..!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக விளங்கும் நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான டீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் தோல்வியை சந்தித்தது. இதனை தொடர்ந்து தளபதி66 படத்தை படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த, படத்தை இயக்குனர் வம்சி இயக்குகிறார். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு முன்னா என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் பாகுபலி நாயகன் பிரபாஸ் ஹீரோவாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து பிருந்தாவனம், ஊப்பிரி, மகரிஷி போன்ற தெலுங்கு படங்களை இயக்கியிருந்தார்.

இவர் இயக்கிய அனைத்து படங்களுமே வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றன. கடைசியாக இவர் இயக்கிய மகரிஷி என்ற படத்தில் மகேஷ்பாபு நடித்திருந்தார். இந்த படம் சிறந்த இயக்குனருக்கான SIIMA விருதை பெற்றது.

இந்த விருது தான் நடிகர் விஜய் தளபதி 66 படத்தை இயக்கும் வாய்ப்பை வம்சி கொடுக்க காரணமாக அமைந்தது. ஆக்சன் ஜானரில் இருந்து சற்றே விலகி காதல் மற்றும் குடும்பம் சம்பந்தப்பட்ட சிக்கல்களை அடிப்படையாகக் கொண்ட படமாக இது உருவாகி வருகிறது.

முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். ஆரம்ப காலத்தில் பூவே உனக்காக, ஒன்ஸ்மோர் போன்ற படங்களில் சாக்லேட் பாயாக வந்த விஜய் தளபதி 66 படத்தில் நாம் பார்க்க இருக்கிறோம். இதுவே விஜய் ரசிகர்களுக்கு ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடித்து வந்திருக்கக்கூடிய விஜய் தற்போத ஒரு மாற்றத்திற்காக மீண்டும் சாக்லேட் பாயாக நடித்துக்கொண்டிருக்கிறார் இந்தப் படத்தை முடித்துவிட்டு உடனே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தன்னுடைய 67-வது படத்தில் நடிக்கிறார் நடிகர் விஜய்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் தேதி குறித்து தற்போது சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தை தயாரிக்க உள்ள லலித்குமார் இந்த படம் அக்டோபர் 3-ஆம் தேதி பூஜையுடன் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படமும் அக்டோபர் 3ஆம் தேதி தான் பூஜை போட்டு தொடங்கப்பட்டது என குறிப்பிடத்தக்கது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version