இப்போ இல்லன்னா எப்பவுமே இல்ல.. வெளிவந்த தளபதி 69 அப்டேட்.. கண்ணீர் விடும் ரசிகர்கள்..!

இப்போ இல்லன்னா எப்பவுமே இல்ல.. வெளிவந்த தளபதி 69 அப்டேட்.. கண்ணீர் விடும் ரசிகர்கள்..!

விஜய் அரசியலுக்கு வருகிறார் என்று கூறியது அவருடைய ரசிகர்களுக்கு எந்த அளவிற்கு மகிழ்ச்சியை கொடுத்ததோ அதே அளவிற்கு அவர் சினிமாவை விட்டு போக போகிறார் என்கிற செய்தி சோகத்தை கொடுத்தது என்றுதான் கூறவேண்டும்.

ஏனெனில் விஜய்யின் பெரும்பாலான திரைப்படங்களை முதல் நாள் முதல் ஷோ திரையரங்குகளில் பார்த்து மகிழ்ந்து வந்தவர்கள் இப்போது இருக்கும் தலைமுறையினர். ஆனால் விஜய் அரசியலுக்கு செல்கிறேன் என்று சினிமாவை மொத்தமாக விட்டு செல்வது அவர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

இப்போ இல்லன்னா எப்பவுமே இல்ல

ரசிகர்கள் பலருக்கும் இது விரும்பத் தகாத விஷயமாக இருந்தாலும் கூட விஜய் முழுமூச்சாக அரசியலில் ஈடுபட வேண்டும் என்றால் அவர் சினிமாவில் ஈடுபட முடியாது என்பதுதான் எதார்த்தமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் விஜய் 2026 தேர்தலுக்கு முன்பாக இரண்டு திரைப்படங்களில் நடிப்பேன் என்று இந்த வருடத்தின் துவக்கத்திலேயே கூறியிருந்தார்.

இப்போ இல்லன்னா எப்பவுமே இல்ல.. வெளிவந்த தளபதி 69 அப்டேட்.. கண்ணீர் விடும் ரசிகர்கள்..!

அந்த இரண்டு திரைப்படங்களுக்கு பிறகு முழுதாக சினிமாவை விட்டு விலகி விடுவதாக கூறியிருக்கிறார். அப்படியாக அவர் நடித்த இரண்டு திரைப்படங்களில் முதல் திரைப்படமாக கோட் திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது.

வெளிவந்த தளபதி 69 அப்டேட்

எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை அந்த திரைப்படம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் விஜய் நடிக்க போகும் கடைசி திரைப்படம் குறித்துதான் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்து வருகிறது. ஏனெனில் அந்த திரைப்படம் குறித்து எந்த ஒரு செய்தியும் இப்போது வரை வெளிவரவில்லை.

ஆனால் ரசிகர்கள் மத்தியில் உள்ள செய்தி என்னவென்றால் இந்த திரைப்படத்தை ஹெச் வினோத் இயக்குகிறார் என்று மட்டும் தெரிந்திருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் ஒரு அரசியல் ரீதியான படமாக இருக்கும் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.

இப்போ இல்லன்னா எப்பவுமே இல்ல.. வெளிவந்த தளபதி 69 அப்டேட்.. கண்ணீர் விடும் ரசிகர்கள்..!

ஆனால் அதிகாரப்பூர்வ தகவல்கள் வராத வரை எதையும் உறுதியாக கூற முடியாது. இந்த நிலையில் விஜய் நடிக்கும் தளபதி 69 திரைப்படத்தை கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம்தான் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் இன்று தளபதி 69 குறித்து அப்டேட் ஒன்றை கொடுத்திருந்தனர்.

கண்ணீர் விடும் ரசிகர்கள்

அதில் அந்த ஐந்து நிமிட வீடியோவில் ஆரம்பம் முதலே விஜயின் ரசிகர்கள் விஜயை எவ்வளவு விரும்பி இருக்கிறார்கள். இந்த துறையை விட்டு விஜய் போவது அவர்களுக்கு எவ்வளவு கவலை அளிக்கிறது என்பதை வெளிப்படுத்தும் வகையில் அந்த வீடியோ அமைந்திருந்தது.

வீடியோவின் இறுதியாக நாளை மாலை 5 மணிக்கு படம் குறித்த முக்கியமான அப்டேட் வரும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு நடுவே விஜய் தொடர்ந்து நடிப்பார் இது அவரது கடைசி படம் கிடையாது என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் கே.வி.என் புரொடக்ஷன் இந்த திரைப்படம்தான் விஜயின் கடைசி திரைப்படம் என்பதை உறுதி செய்து உள்ளது.

About Jiraya

Avatar Of Jiraya

Check Also

“80 வயசுலயும் ரொமான்ஸ் சக்சஸ் ஆகணும்னா இதை பண்ணனும்..” கூச்சமின்றி ஓப்பனாக பேசிய நடிகை நதியா..!

“80 வயசுலயும் ரொமான்ஸ் சக்சஸ் ஆகணும்னா இதை பண்ணனும்..” கூச்சமின்றி ஓப்பனாக பேசிய நடிகை நதியா..!

விகடன் நிறுவனம் குறித்து உங்கள் மத்தியில் அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பத்திரிக்கை துறையில் பிரபலமான நிறுவனமாக …