உங்க அழகுல.. நாலு நாள் துக்கம் போச்சு..! – பிக்பாஸ் கேப்ரில்லா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..!

கேப்ரில்லா:தமிழ் திரைப்படங்கள் மற்றும்  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகை  கேப்ரில்லா சார்ல்டன்.ஒரு தனியார் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் முதன் முதலாக தோன்றினார். ஜோடி நம்பர் ஒன் சீசன் 6 வெற்றியாளராக ஆனார் நடிகை கேப்ரில்லா சார்ல்டன்.

தமிழ்நாட்டின் சென்னையில் 2000 ஆவது ஆண்டில் பிறந்தவர் இவர். தனது ஒன்பதாவது வயதில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனது வாழ்க்கையை தொடங்கினார். அதன்பிறகு ஜோடி நம்பர் ஒன் சீசன் 6 விஜய் டிவியின் மூலம் அனைவரும் அறிந்த திரை பிரபலமானார்.

‘ஜோடி நம்பர் ஒன்’ சீசனில் தொடர்ச்சியாக தோன்றி எலிமினேட் ஆகாமல் கடைசிவரை தனது நடனத்தையும் தனது நடிப்பையும் வெளிக்காட்டி அதன் வெற்றியும் அடைந்தார் இவர்.

இவர் தமிழ் திரைப்பட துறையில் முதன் முதலில் 2012 இல் தனுஷ் நடிப்பில் அவரது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் சுருதிஹாசன் கதாநாயகியாக நடித்து இருந்த ‘மூணு’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியின் தங்கையாக வாய் பேச முடியாத பெண்ணாக நடித்தார் இவர்.

அதன்பிறகு 2013 ஆம் ஆண்டு ‘சென்னையில் ஒரு நாள்’ என்ற திரைப்படத்தின் மூலம் ரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனது அசாத்திய நடிப்பை வெளிப்பக்காட்டி இருந்தார் நடிகை கேப்ரலா. இந்த படம் இவருக்கு தமிழ் திரையுலகில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

மேலும் 2016 ஆம் ஆண்டு சமுத்திரகனி அவர்களின் நடிப்பில் வெளியான ‘அப்பா’ என்ற திரைப்படத்தில் ரசித்த பானு என்ற முஸ்லிம் பெண்ணாக நடித்து மீண்டும் தமிழ் துறையில் தன்னை ஓர் சிறந்த குணச்சித்திர நடிகையாக வளர்த்துக் கொண்டார் நடிகை கேப்ரலா.

அதன்பிறகு 2012 ஆம் ஆண்டு ‘7c’ என்ற விஜய் தொலைக்காட்சி தொடரின் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு வந்தார் நடிகை கேப்ரலா அதன்பிறகு 2020 ஆம் ஆண்டு நடந்த ‘பிக் பாஸ்’ தமிழ் சீசன் 4 என்ற விஜய் டிவியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பாளராக கலந்து கொண்டு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார் இவர்.

இவர் தற்போது விஜய் டிவியின் ஈரமான ‘ரோஜாவே சீசன் 2’ என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஆனாலும் இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு சோசியல் மீடியா ரசிகர்கள் தங்களது பெருத்த ஆதரவை வழங்கி வருகின்றனர் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வருகிறது.

இது போன்ற சுவாரஸ்யமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …

Exit mobile version